Wednesday, June 5, 2013

2013 ஆண்டு சுற்றுச்சுழல் தின கருப்பொருள்- உணவு வீணாகுதல்


சிந்தியுங்கள், சாப்பிடுங்கள், சேமியுங்கள்
இந்த வருட சுற்றுச்சுழல் தின  கருப்பொருள் உணவு வீணாக்குதல் பற்றியது. சிந்தியுங்கள், சாப்பிடுங்கள், சேமியுங்கள் (Think, Eat, Save). ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் [UN Food and Agriculture Organization (FAO)] சில புள்ளிவிபரங்கள் நம்மை வருத்தத்தில் ஆழ்த்துகின்றன. 


ஒவ்வொரு வருடமும் 1.3 பில்லியன் டன்கள் உணவுப் பொருட்களை நாம் வீணாக்குகிறோம். ஆனால் உலகின் 7 மனிதர்களில் ஒருவர் பட்டினியாக படுக்கைக்குச் செல்கிறார். 5 வயதிற்குட்ப்பட்ட 20,000கும் அதிகமான குழந்தைகள் தினமும் பசியால் மடிகின்றனர். இந்த உணவு உற்பத்தி என்பது 25% நிலம், 70% நன்னீர், 80% காடுகள் அழிப்பு மற்றும் 30% பசுமை குடில்  வாயுக்கள் வெளியேற்றத்தை உள்ளட்டக்கியது.


உணவு - நாம் உண்ணுவதற்கு ஏற்ப மாறுவதற்கு முன் உணவில் மறைந்துள்ள நீர் (Virtual Water), உணவு தூரம் (Foodmile), சமைக்க தேவையான எரிபொருள் மற்றும் நீர் (Cooking fuel+ Water),  சமைப்பவரின் திறமை + நேரம் (Cook’s ability+ Time) போன்ற பல்வேறு அம்சங்களைக் உள்ளடக்கியது. எனவே உண்ணும்  உணவை வீணாக்குவதால் மேற்கண்ட முக்கியமான அம்சங்களை வீணடிக்கிறோம் என்பதை நினைவில் கொண்டு அளவோடு உண்டு சுற்றுச்சுழல் காப்போம்.


மேலும் படிக்க:-
 

 

3 comments:

  1. அனைவரும் அவசியம் உணர வேண்டிய தகவல்கள்... இணைப்பில் உள்ள விரிவான தகவலுக்கும் நன்றி...

    ReplyDelete
  2. வீணடிக்காமல் அளவோடு உண்டு சுற்றுச்சுழல் காப்போம்.

    ReplyDelete
  3. திரு.திண்டுக்கல் தனபாலன்
    திருமதி. இராஜராஜேஸ்வரி

    உங்கள் இருவரின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete