Wednesday, March 20, 2013

தண்ணீர் ---- புதிர்கள் நிறைந்த தெய்வாம்சம் மிக்க பொருள்.

டாக்டர். மசாரு இமடோ தனது புத்தகத்துடன்

நீரின் சிறப்பு அம்சம் அதன் 3 நிலைகள் திட, திரவ  வாயு நிலைகள். அதன் 3 நிலைகளிலும் அவை ஜீவராசிகளுக்கு வாழ்வளிப்பதுதான் பெரும் சிறப்பு. தொழிற்புரட்சிக்கும், போக்குவரத்திற்கும் நீராவி என்ஜின்  வித்திட்டது. நீராவி இல்லாத மனித வாழ்வை எண்ணிப் பாருங்கள்??

போக்குவரத்தை மாற்றியமைத்த நீராவி எஞ்சின்


இன்றைய நீர்,அனல்,அணு மின்சாரம்?? நீர் இல்லையேல் வாழ்கை ஸ்தம்பித்துவிடும்.


பிராத்தனையின் வலிமை

நீருக்கு ஜீவராசிகளைப் போன்று நினைவாற்றல், மற்றும் உணர்ச்சிகளை பிரதிபலிக்கும் திறன், பிராத்தனைகளுக்கு உட்பட்டு தன்னைத்தானே தூய்மையாக்கும் பண்பு  உண்டு என்பதை டாக்டர். மசாரு இமடோ தனது “The Hidden messages in water” (தண்ணீரில் மறைந்துள்ள செய்திகள்) என்ற நூலில் விளக்கமாக தந்துள்ளார். பிரமிப்பை தரும் படங்களுடன் அவை விளக்கப்பட்டுள்ளது. நியுயார்க் டைம்ஸின் பிரபல புத்தக வரிசையில் இந்த நூலும் இடம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

நினைவாற்றல், மற்றும் உணர்ச்சிகளை பிரதிபலிக்கும் திறன்


ஒவ்வொரு மதமும் மனிதர்கள் புனிதம் பெற தண்ணீருக்கு முக்கியத்துவம் தருகின்றன. மனிதர்கள் மதத்திற்கும், பணத்திற்கும் முக்கியத்துவம் தந்து தண்ணீரை மாசுபடுத்தி புனிதமற்றதாக்குகிறோம். விளைவுகளை அனுபவித்தும் நாம் திருந்தாமல் இருப்பது அடுத்த தலைமுறையினரை பாதிக்கும் என்பதில் ஐயமில்லை. மலைகளின் வனவளம் சமவெளியின் நிலவளம் எனவே வனவளம் காப்போம். மரம் நடுவோம். மழை பெறுவோம். 

7 comments:

  1. மனிதர்கள் மதத்திற்கும், பணத்திற்கும் முக்கியத்துவம் தந்து தண்ணீரை மாசுபடுத்தி புனிதமற்றதாக்குகிறோம். விளைவுகளை அனுபவித்தும் நாம் திருந்தாமல் இருப்பது அடுத்த தலைமுறையினரை பாதிக்கும் என்பதில் ஐயமில்லை. “மலைகளின் வனவளம் சமவெளியின் நிலவளம்” எனவே வனவளம் காப்போம். மரம் நடுவோம். மழை பெறுவோம்.//
    நன்றாக சொன்னீர்கள்.நீங்கள் சொன்னது போல் மலைகளில் வனவளமும், சமவெளியில் நிலவளமும் இருந்தால் தான் மழை பெற முடியும்.
    வன வளத்தை மேம்படுத்தி மரம் நிறைய நட்டு மழை பெய்ய நாடு செழிக்க வழி வகுப்போம்.
    நன்றி.

    ReplyDelete
  2. உங்கள் வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  3. அனைவரும் உணர வேண்டியது...

    நன்றி...

    ReplyDelete
  4. உங்கள் வருகைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  5. "விழித்து கொண்டோர் எல்லாம் பிழைத்து கொண்டார் " புரிய வேண்டுமே

    ReplyDelete
  6. " நீரின்றி அமையாது உலகு "
    தண்ணீரின் முக்கியத்துவம் பற்றிய பதிவுக்கு வாழ்த்துக்கள் சார் .நீரின் அருமையை ஒவ்வொருவரும் உணரவேண்டும்.

    ReplyDelete
  7. திரு.மலர் பாலன்
    திரு. சக்தி

    உங்கள் இருவரின் வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete