Sunday, September 18, 2011

இன்று உலக மூங்கில் தினம்.


 உலக மூங்கில் தினம் ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதம் 18 தேதி கொண்டாடப்படுகிறது. உற்பத்தியில் சீனா முதலிடத்திலும், இந்தியா இரண்டாவது  இடத்திலும் உள்ளன. ஆனால் உலக வர்த்தக அளவான  $ 10 பில்லியன் தொகையில்  சீனா சுமார் 50% பங்கை பெற்று முன்னணியிலுள்ளது. 2015 ஆண்டுகளில் இதன் அளவு $20 பில்லியனாக உயரும் எனவும், தற்போதைய உள்ளூர் வர்த்தகம் ரூ.6505 கோடி எனவும் அது 2015 ஆண்டில் ரூ.26,000 கோடியாக வளர வாய்ப்புள்ளதாகவும்    இந்திய விவசாயதுறை  அமைச்சகம் கூறுகிறது. மூங்கிலை பச்சைத் தங்கம், ஏழைகளின் மரம், வனவாசிகளின் வாழ்வதாரம், மற்ற மரங்களைக் காட்டிலும் அதிக கரிமில வாயுவை எடுத்துக் கொண்டு அதிக பிராணவாயுவை வெளியேற்றும் என்கிறோம். ஆனால் மூங்கில் வளர்ப்பில் எந்த அளவிற்கு முன்னேறியிருக்கிறோம் ?
தமிழ் நாட்டில் சாதாரணமாக காணும் காட்சி.
 வருத்தம் தரும்  அளவிற்குத்தான் உள்ளது. உபயோகம் சுமார் 1500க்கு மேலிருந்தாலும் தமிழகத்தில் மூங்கில் வளர்ப்பை ஏனோ மக்கள் விரும்புவதில்லை. இன்னும் கூடை, ஏணி, தடுப்பு போன்ற சாதாரண நிலையிலேயே மூங்கில் உபயோகம் உள்ளது. மற்ற மாநிலங்களில் நிலைமை மேம்பட்டுள்ளது. நாற்காலி, மேசை, ஒட்டுப் பலகை. ஜன்னல் மறைப்புகள்  என முன்னேற்றம் உள்ளது.
வடகிழக்கு மாநிலங்களில் சுயுதவிகுழுக்கள் செய்யும் பொருட்கள்
 வடகிழக்கு மாநிலங்களில் பள்ளிக்கூடங்களை மூங்கிலைக் கொண்டு கட்டுகின்றனர் என்பது மகழ்ச்சி தரும் செய்தி.
வடகிழக்கு மாநிலங்களில் மூங்கிலால் உருவாக்கப்பட்ட பள்ளிகள்
 உலக அளவில் தரை, சுவற்றிற்கான ஒட்டுப் பலகை, கூரை கூட மூங்கிலில் செய்கின்றனர் என்பது வியப்பிற்கான ஒரு செய்தியாகும். ஐரோப்பாவின் முக்கிய விமான நிலையங்களில் ஒன்றான  ஸ்பெயின் நாட்டின் மார்டிரிட் நகர விமான நிலைய T 4 பயணிகள் பகுதியின் கூரையை மூங்கிலால் செய்துள்ளனர். இயற்கை இந்தியாவிற்கு கொடுத்த கொடை மூங்கில்”. எப்படி முன்னெடுத்துச் செல்லப் போகிறோம் ?? மத்திய அரசாங்கம் தேசீய மூங்கில் இயக்கம் (National Bamboo Mission) என்ற இயக்கத்தின் மூலம் பிரபலப்படுத்துகிறது வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வது நம் கையில்தான் உள்ளது
மூங்கிலால் செய்யப்பட்ட திரை மறைப்புகள் மற்றும் தரைப் பலகைகள்.
            மூங்கில் கூரையில் “மார்டிரிட் நகர விமான நிலைய T 4 பயணிகள் பகுதி

மேலதிக தகவல்களுக்கு :
தேசீய மூங்கில் இயக்கம் 

படங்கள் உதவி : Mr. EcoBabu and Internet

9 comments:

  1. மூங்கில் தினமா ..........

    ReplyDelete
  2. மூங்கில் குறித்து பல அரிய தகவல்கள். நல்ல பகிர்வு!

    ReplyDelete
  3. திரு.ஸ்டாலின்
    திரு.சேட்டைக்காரன்

    உங்கள் இருவரின் வருகைக்கும் மிக்க நன்றி.நாம் போகவேண்டிய தூரம் மிக அதிகம். மூங்கிலை அதிகம் பயன்படுத்தினால் பொதுவாகவே சுற்றுச்சுழலுக்கு நல்லது.

    ReplyDelete
  4. நல்ல பதிவு. இன்னும் விரிவாக செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்

    ReplyDelete
  5. உங்கள் வருகைக்கு மிக்க நன்றி. விரிவாக எழுத முயற்சிக்கிறேன். மக்களுக்கு படிக்க நேரம் இருக்கமா? என்ற எண்ணம் எப்பொழுதும் எனக்கு உண்டு. காரணம் இதுபோன்ற பதிவுகளை மக்கள் விரும்பி படிப்பதில்லை இருப்பினும் தரவேண்டியது நமது கடமை என்பதால் தொடர்ந்து எழுதுகிறேன்.

    ReplyDelete
  6. Dear Sir, Very nice to know about bamboo. Thorn-less Bamboo cultivation for paper is coming up very fast in rural areas. But Sir! you have mentioned that bamboo converts more C02 to 02 but I heard trees like vilvam, pungan are more efficient! Can you pl. share more info. on which tree is best converter??

    ReplyDelete
  7. திரு. சிவராமன்

    வில்வம், புங்கை பற்றி கேட்டிருக்கிறீர்கள். ஒப்பிடுகையில் மூங்கில்தான் அதிகமாக கரிம வாயுவை எடுத்துக் கொள்ளும். மரங்களுடன் ஒப்பிடுகையில் எப்பொழுதும் பசுமையுடன் இலையுதிர்க்காமல் இருக்கும். புங்கன் குளிர்காலத்தில் இலையுதிர்க்கும். மேலும் விரைவாக வளரும் (3 வருடத்தில் 40 அடி உயரத்தை எட்டியிருக்கும் )தன்மையுடன் புதிய குருத்துகள் வந்துகொண்டே இருக்கும். குறிப்பிட்ட காலத்தில் இடதை மிக அதிகமாக ஆக்கிரமிப்பது மூங்கிலே.

    ReplyDelete