Thursday, June 2, 2011

வீட்டுத் தோட்டதில் கஸ்தூரி மஞ்சள்


கஸ்தூரி மஞ்சள்
தாவரவியல் பெயர் Curcuma Aromatica

...... அங்கு கொஞ்சி விளையாடும் எம் குல பெண்களுக்கு மஞ்சள் அரைத்துப் பணி புரிந்தாயா?...........

என்று வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் திரு. சிவாஜி கணேசன் அவர்கள் பேசிய வசனம் இன்னும் நம் மனதில் பதிந்து இருக்க, பல நூறு ஆண்டுகளாக பெண்கள் பயன்படுத்திய அழகு சாதனத்துடன் கூடிய கிருமிநாசினியான மஞ்சள் இன்று பெண்களிடத்தில் தன் மதிப்பை இழந்து மறைந்து வருகின்றது.  முக அழகிற்காக பல்வேறு க்ரீம்பயன்படுத்தி அழகை இழந்தவர்களும், இழந்து கொண்டிருப்பவர்களும் உண்டு. ஆனால் பலநூறு ஆண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர்கள் இதன் பயன் அறிந்துள்ளனர் என்பதற்கு கீழ் கண்ட பாடல் உறுதி செய்யும்.

புண்ணுங் கரப்பானும் போக்கைக் கிருமிகளும்
நன்னுமந் தாக்கினியும் நாசமாம்- வண்ணமலர்த்
தொத்தே றளகமின்னே சுக்கிலமும் புதிமாங்
கத்தூரி மஞ்சளுக்குக் காண். ( அகத்தியர் குண பாடம் )

இந்தியாவில் மங்கள நிகழ்ச்சிகளுக்கு முதன்மை பெற்றது மஞ்சள். பூமிக்குக் கீழ் விளையும் கிழங்கு வகையைச் சார்ந்தது மஞ்சள். சமையலுக்கு விரலி மஞ்சள். மேனி அழகிற்கு கஸ்தூரி மஞ்சள். சொறி, சிரங்கு, வியர்வை நாற்றத்திற்கு மேல் பூச்சு. மேனி பளபளக்கவும், உடலிலுள்ள சிறு சிறு உரோமங்களை அகற்றவும் பயன்படுத்தப்படும். பெண்கள் இதனை தங்களின் முகப் பொலிவிற்கு உபயோகிக்கலாம்.  கஸ்தூரி மஞ்சளை மிக எளிதாக  இயற்கை முறையில் வீட்டுத் தோட்டதில் வளர்க்கலாம்.

13 comments:

  1. Hi, I came across the link to your blog while reading an article in Hindu on kitchen gardens. From the pictures, it seems like there might be a lot of useful information in your blog about growing plants in limited space. Unfortunately I can't read Tamil, is there a translation available?
    Thanks

    ReplyDelete
  2. Hi

    I am writing in Tamil only for the time being. If you want it in English kindly give me your email id.For further reading and photographs kindly use the below link
    http://maravalam.blogspot.com/search/label/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D

    ReplyDelete
  3. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  4. ஆருமையன பதிவு.
    நான் எனது வீட்டுத்தோட்டதில் பயிரிட விரும்புகிறேன். விதை எங்கு கிடைக்கும்.

    ReplyDelete
  5. Sir! Can I directly use the "Manjal" purchased from grocery store as a seed to raise a plant?

    ReplyDelete
  6. Sir,

    சமையலுக்கு விராலி மஞ்சள்.அதனை கொதித்த நீரில் வேக வைத்து காயந்த பின் கடைகளுக்கு வரும், முளைப்புத்திறன் இருக்காது. கஸ்தூரி மஞ்சள் அழகிற்கானது.நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.

    ReplyDelete
  7. தகவலுக்கு நன்றி!

    சென்னையின் தட்பவெப்ப நிலைக்கு இதனை வீட்டுத் தோட்டத்தில் வளர்க்க முடியுமா?

    வளர்க்க முடியுமானால் இந்த கன்றுகள் எங்கே கிடைக்கும்?

    தகவல் அறியத் தந்தால் உதவியாக இருக்கும்.

    ReplyDelete
  8. திரு.மு.சரவணக்குமார்

    உங்கள் வருகைக்கு மிக்க நன்றி. சென்னையில் வளர்க்க இயலும். சற்று நிழல் தேவை. நாட்டு மருந்து கடைகளில் பச்சையாக உள்ள கிழங்கை வாங்கி முளைக்க வையுங்கள். வேனிற்காலம் முடிந்தவுடன் நட்டிவிடுங்கள்.

    ReplyDelete
  9. Hi Friend, you are doing a great job, and I impressed by friends like you and now I am trying to grow vegetables in my garden. I am from Coimbatore. Where I can get the green grow bags that you have shown in the picture, and what is the cost of that grow bags (approximate)... please continue your good work... Thanx in advance...Jai.

    ReplyDelete
  10. Mr.Jai

    Thank you very much for visiting my Blog. The Bags are available near Gandhipuram or contact me.

    ReplyDelete
  11. Hai, u r doing good work. I have a doubt, is there any option in the HDPE bags for extra water trainage?

    ReplyDelete
  12. Thank you very much for visiting my Blog. You have small holes on bottom of the bag, So excess water if any will drain through that holes.

    ReplyDelete