Friday, September 24, 2010

பிறர் நலம் நோக்கும் திரு. வெ. தலைமலை நாடார்.

திரு. வெ. தலைமலை நாடார்.
வயதானவர்கள் கிராமபுறங்களில் பேருந்துக்காக காத்திருக்கையில் நிழல் பகுதி சாலையின் எதிர்புறம் இருந்தால் அங்கு அமர்ந்து பேருந்து வரும்போது அவசர அவசரமாக திரும்பும் போது கால் இடறி சாலையில் விழுவது பொதுவாக நடக்கும் ஒரு செயல். இதே நிகழ்ச்சி பத்தாண்டுகளுக்கு முன் திருநெல்வேலி மாவட்டம் “தேவிபட்டினம் விளக்கு” பகுதியில் ஒரு வயதான பாட்டிக்கு நிகழ்ந்தது. அதை பார்த்துக் கொண்டிருந்த சைக்கிளில் சென்று பேப்பர் வியாபாரம் செய்யும் அந்த மனிதரின் எண்ணத்தில் சாலையின் இந்த புறத்திலும் மரம் இருந்திருந்தால் பாட்டி விழுந்திருக்கமாட்டார்கள் என்ற சிறு விதை விழுந்தது.
தேவிபட்டினம் விளக்கு பகுதி மரம் வளர்ந்த பின்பு.
உடனே செயல்பட ஆரம்பித்தார். அந்த இடத்தில் மரங்களை நட்டு வளர்க்க ஆரம்பித்தார். பின்னாட்களில் வியாபாரத்தை வெற்றிலைக்கு மாற்றினார். ஆனால் மரம் நடும் பணியை மாத்திரம் மாற்றாமல் தொடர்ந்து எல்லா இடங்களிலும் செய்து வருகிறார். மனைவியும் ஆதரவு தர சொந்த செலவில் தண்ணீர் ஊற்றுவதற்கு கூலியாள் வைத்து தண்ணீரை எடுத்துச் செல்ல ஒரு வண்டியையும் ஏற்பாடு செய்தார். இன்று அந்த தம்பதியினருக்கு 10,000க்கும் அதிகமான குழந்தைகள் அவர் தெற்கு தேவதானம் ஊரை சேர்ந்த திரு.வெ. தலைமலை நாடார் அவர்கள். உழைப்பால் உயர்ந்தவர் சமூக பணியில் தோய்வேயில்லை. சென்ற மாதம் அவரை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. சுற்றுச்சுழல் பற்றிய அவரது ஆழ்ந்த ஞானம் மகிழ்ச்சியை தந்தது. பரபரப்பு நிறைந்த இன்றைய உலகில் பணத்தை பற்றி மாத்திரமே பேசும் பல்வேறு மனிதர்களை விட்டு இவர்களைப் போன்று தன் நலம் பார்க்காமல் பிறர் நலம் நோக்கும் மனம் படைத்த நல்ல மனிதர்களை சந்திக்கும் போது வாழ்கையின் அர்த்தம் புரிகிறது. பல்வேறு விருதுகள் பெற்றிருக்கும் இவர் மேலும் அரிய பெரிய விருதுகள் பெற்று மர வளர்ப்பில் மேலும் சாதனை செய்ய இவ்வலைப் பூ வாழ்த்துகிறது.


தொடர்பிற்கு:
திரு. வெ. தலைமலை நாடார் (வெற்றிலை வியாபாரம்)
தெற்கு தேவதானம்
இராஜபாளையம் தாலூக்கா
விருது நகர் மாவட்டம்

அலைபேசி : 93632 62808


16 comments:

  1. திரு தலைமலை அவர்களுக்கு வாழ்த்துக்கள்..

    வாழ்க வளமுடன் ..

    நன்றி வின்செண்ட் ..பல நல்ல உள்ளங்களை
    தொடர்ந்து வாழ்த்தும் வாய்ப்பை அளிப்பதற்கு..

    ReplyDelete
  2. எளிய மனதிற்குள் பெரும் சிகரங்கள்... அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. மகிழ்ச்சியான பகிர்வு

    தலைமலை நாடாருக்கு வணக்கங்கள்

    ReplyDelete
  4. நல்லோர் ஒரு சிலர் உளதாலே அவர் பொருட்டு எல்லோருக்கும் பெய்யும் மழை.

    ReplyDelete
  5. வணங்கப்பட வேண்டிய ஒரு நபரைப் பற்றி தெரிவித்து இருக்கிறீர்கள் திரு வின்செண்ட். அவரது பணி தொடர வாழ்த்துக்கள்.

    வெங்கட்.

    ReplyDelete
  6. //திரு தலைமலை அவர்களுக்கு வாழ்த்துக்கள்..//

    பகிர்விற்கு நன்றி

    ReplyDelete
  7. நல்ல பதிவு.

    திரு.தலைமலை அவர்களுக்கு வாழ்த்துக்கள் !
    அவர் தொண்டுக்கு உறுதுணையாக உள்ள அவர் மனைவிக்கும் வாழ்த்துக்கள்.

    மேலும் பலவிருதுகள் அவரை வந்து அடைய வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. உங்கள் அனைவரின் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி.. இவர்களை போன்ற நல்ல உள்ளங்கள் இருப்பதால்தான் இன்னும் மழை பெய்து கொண்டிருக்கிறது என்பது உண்மை. குறைந்த பட்சம் வலைப் பூக்களிலாவது இவர்களின் சாதனைகள் ஆவணபடுத்தப் படவேண்டும் என்பதே எனது ஆவல்.

    ReplyDelete
  9. அன்பு திரு வின்செண்ட், நீங்கள் அறிமுகம் செய்திருக்காவிட்டால் இவரைப் பற்றித் தெர்ய வாய்ப்பில்லை. அரசர்கள் சாலையோர மரங்கள் நட்டு வள்ர்த்த கதைகள் சொல்லும் சரித்திர ஏடுகளில் இவர் பெயரும் இடம் பெறுகிறது.வணக்கங்கள் திரு.தலைமலை அவர்களுக்கும்,நல்ல உள்ளத்தை அடையாளம் காட்டிய உங்களுக்கும்.
    இந்த லின்க் கொடுத்த கயல்விழி முத்துலட்சுமிக்கும்.

    ReplyDelete
  10. திருமதி. வல்லிசிம்ஹன்

    உங்கள் வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி. புகைபடத்திற்காக முக்கிய தினங்களில் காட்சியளிக்கும் இந்த நவீன உலகில் இவரைப் போன்ற சிலரை பற்றி தமிழ் வலைப் பூக்களில் ஆவணம் உண்டு அதற்கு கீழ்கண்ட தொடர்பை உபயோகியுங்கள்.
    http://maravalam.blogspot.com/2010/09/k.html

    ReplyDelete
  11. \\திரு தலைமலை அவர்களுக்கு வாழ்த்துக்கள்..\\
    பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  12. திருமதி. அம்பிகா

    வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி.

    ReplyDelete
  13. இந்த உயர்ந்த உள்ளம் கொண்டவருக்கும் எனது அன்பான வாழ்த்துக்கள்

    ReplyDelete
  14. திரு.சங்கர்


    உங்கள் வருகைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  15. மக்களுக்கு விழிப்புணர்வும்,கடமையுணர்வையும் துண்டும்,தொண்டுள்ளம் கொண்ட திரு.தலைமலை நாடார், வாழ்க.

    ReplyDelete
  16. உங்கள் வருகைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete