Wednesday, June 2, 2010

மத்திய அமெரிக்காவில் “அகதா புயல்”

இந்த வருட வெப்ப மண்டல புயல் கணக்கை மத்திய அமெரிக்காவில் “அகதா புயல்” மூலம் இயற்கை துவக்கியுள்ளது. பஞ்ச பூதங்களில் இரண்டு (நீர், காற்று )சேர்ந்து மற்றொரு பூதமான நிலத்தில் வினை புரிய பாதிப்புக்கு உள்ளாவது என்னவோ நாம் தான். நூற்றுக்கு மேற்பட்டோர் உயிர் இழப்பு பல ஆயிரம் பேர் வீடுகளை இழந்துள்ளனர். படங்களையும் ,வீடீயோவையும் பார்க்கும் போது பிரமிப்பாக உள்ளது.


சாலை சந்திப்பில் மிகப் பெரிய குழி. ஆறுகள் பெருக்கெடுத்து ஓடுகின்றன அழகு படுத்தப்பட்ட பாலத்தின் அருகே மிக பெரிய குழி. கௌதமாலாவைத் தாக்கிய அகதா புயல் பக்கத்து நாடுகளான எல்சால்வேடர், ஹோண்டுரா ஆகிய நாடுகளையும் தாக்கியது. பலத்த மழை காரணமாக அங்கும் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளன..

இயற்கையோடு ஒன்றி வாழ்ந்தால் மாத்திரமே பாதிப்பை குறைக்கமுடியும் முழுவதுமாக தவிர்க்கமுடியாது.

4 comments:

  1. ///////இயற்கையோடு ஒன்றி வாழ்ந்தால் மாத்திரமே பாதிப்பை குறைக்கமுடியும் முழுவதுமாக தவிர்க்கமுடியாது.//////


    அனைவரும் புரிந்துகொண்டால் நலமே

    ReplyDelete
  2. திரு. சங்கர்

    உங்கள் வருகைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  3. இயற்கை இல்லாமல் நாம் இல்லை.. இயற்கையை அழித்தல் என்பது நமக்கு நாமே முடிவு கட்டுவது தான்...

    நண்பர்கள் இணைந்து நடத்தி வரும் எங்கள் விழுதுகள் அமைப்பு(www.vizhudugal.org, புன்செய் புளியம்பட்டி, ஈரோடு மாவட்டம்) மூலம், இந்த வருடம் மழை ஆரம்பித்த பின்னர் மரக் கன்றுகளை வைக்க எண்ணி உள்ளோம். இலவசமாக அல்லது எங்கு மரக் கன்றுகள் கிடைக்கும் என்று தெரிய படுத்தினால் மிக்க உதவியாய் இருக்கும்.

    எனது மெயில் : elango.ka@gmail.com

    Thanks

    ReplyDelete
  4. திரு. இளங்கோ

    உங்கள் வருகைக்கு நன்றி. வனதுறை விரிவாக்க மையத்தை அணுகுங்கள். தற்சமயம் ஒரு லட்சம் மரம் நடும் திட்டமிருப்பதால் இலவச மரக் கன்றுகள் சற்று கஷ்டமே.

    ReplyDelete