Monday, May 3, 2010

மாடியில் கீரை வளர்ப்பு.

கீரைகள் வளர்ப்பதற்கு மிக எளிதாக இருப்பதும், மிக குறுகிய காலத்தில் அறுவடை செய்தவுடன் விற்பனையும் என்பதால் புறநகர் பகுதிகளில் கிடைக்கும் நகர கழிவு நீரைக் கொண்டு மிகவும் எளிதாக வளர்த்து விற்பனைக்கு கொண்டு வந்து விடுகிறார்கள். இதனால் மிக பயனுள்ள கீரையை வாங்க தயக்கமாக உள்ளது. காரணம் வளர்க்கப்படும் இடத்தின் நம்பக தன்மை. நன்மை தருவதற்கு பதிலாக சமயங்களில் வயிற்றுபோக்கு, ஒவ்வாமை போன்றவை ஏற்பட்டு விடுகின்றன. இதனை நாமே கிடைக்கின்ற பொருட்களை கொண்டு நகரங்களில் எளிதாக நம்பகத் தன்மையுடன் வளர்க்க முடியும் என்பது எனது அனுபவம். அதனை உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகிறேன். 10 அடி நீள பையில் காய்ந்த இலைகள் தென்னை நார் கழிவு + மண்புழு உரம் + வேம் ஆகியவற்றை நிரப்பி வைக்கப்பட்டுள்ளது.மெதுவாக முளைக்க ஆரம்பிக்கும் கீரை விதைகள்நன்கு வளர்ந்த கீரை. சமையலுக்கு தயார்

மேலும் காண:
http://maravalam.blogspot.com/2010/08/blog-post_23.html

16 comments:

  1. சூப்பர் நண்பரே.

    ஒரு சந்தேகம். அப்படியே வெயிலில் இருப்பதால் ஒன்றும் ஆகாதா? அல்லது சிறிது நிழல் படுமாறு வைக்க வேண்டுமா? அந்த பை நீங்கள் தயாரித்ததா? எனில் எப்படி? அல்லது கடைகளில் கிடைக்கிறதா? அதே போல் உரம் பற்றியும் அது நகரங்களில் எங்கு கிடைக்கும் என்பது பற்றியும் விளக்கினால் நலம். (முன்பே எழுதி இருப்பின் சுட்டி தரவும்) நன்றி!

    ReplyDelete
  2. Hi, quite interesting. What's the big pot (where the greens are grown) made of ? I'm slowly building up my terrace garden, with old "ura mootai".

    ReplyDelete
  3. திரு.ஷங்கர்
    M/s.Peelamedu bulls

    உங்கள் இருவரின் வருகைக்கும் நன்றி. அந்த நீண்ட பை HDPE என்ற பொருளால் ஆனது. எனது தேவைக்காக செய்தேன் சுமார் ரூ.300/= ஆகின்றது. நான் மிக சொற்ப அளவில்தான் மண் இடுகிறேன் மற்றவை மக்கும் கழிவுகள். http://maravalam.blogspot.com/2010/01/blog-post_16.html
    வீட்டுத் தோட்டம் என்ற தலைப்பில் உள்ளதை பாருங்கள்.

    ReplyDelete
  4. கீரையை பொறுத்த வரை வெளியில் வாங்குவது முற்றிலும் தவிர்க்க வேண்டும். என்னெனில் அதிக பூச்சிகொல்லிகள் உபயோகிக்கபடுகிறது.

    வீட்டில் வளர்ப்பது மிக மிக அருமையான யோசனை.

    நன்றி

    விஜய்

    ReplyDelete
  5. திரு.விஜய்

    நீங்கள் கூறுவது உண்மை. குறுகிய காலத்தில் அறுவடை என்பதால் பூச்சிகொல்லிகளின் படிவு அதில் இருக்கும்.வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  6. ்நண்பரே நான் நேரில் பார்த்த போது வெரும் குப்பைதானே என்று இருந்தேன் அவை மண்ணுடன் கலந்து மண்புழுவால் எருவாய் கீரையும் நன்கு வளர்ந்து விட்டது. பொருட்காட்ச்சியுல் பார்த்த பிளாஸ்டிக் பைகள் நமக்கு ஏற்ற வாறு அமைத்துக் கொடுத்துள்ளார்கள் கோவை கண்ணன் டிப்பார்ட்மெண்ட் அருகில் அவர்கள் கடை உள்ளது. தெறியாதவர்களுக்கு நல்ல பதிவு. மிக அருமை. நன்றி.

    ReplyDelete
  7. சார்

    உங்கள் வருகைக்கு நன்றி. உண்மையில் பதிவிட மறந்த மண்புழுவும் அந்த பையில் உள்ளது என்பதை தெரிவித்தமைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  8. /மாடியில் கீரை வளர்ப்பு /

    நல்ல பதிவு.

    ReplyDelete
  9. திருமதி.கோமதி அரசு

    உங்கள் வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  10. வின்செந்த் சர், இந்த மாதிரி ,கேரை பயிர் செய்யும்போது tape worm infection தவிர்க்க முடியும் என்று நினைக்கிறேன். பச்சை காய்கரியாக உண்ணலாமே?

    ReplyDelete
  11. திருமதி. சீதா

    உங்கள் வருகைக்கு மிக்க நன்றி.
    நீகள் கூறுவது மிக சரியே. மண் சம்பந்தமான நோய்கள் குறைவு. வந்தாலும் எளிதில் கட்டுப்படுத்தலாம்.

    ReplyDelete
  12. Hello Vincent Sir,
    Greens are good for health. By growing them in terrace we get them fresh. It is a good technique. Greens like Swiss Chard, Mustard leaf, etc., are popular in African and European countries. We can try them here also in our terraces.
    - Manjula

    ReplyDelete
  13. Greens like Swiss chard, mustard leaf, etc., are popular in Afrcia and Europe. We can try them here by this technique.

    ReplyDelete
  14. Thank you very much for visiting My Blog. Kindly tell me where to get the seeds of "Swiss chard". Is it available in Coimbatore?

    ReplyDelete
  15. திரு. சூரியா

    உங்கள் வருகைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete