



விஞ்ஞான முன்னேற்றம் குழாயில் குடிநீரை தருகிறது. வரவேற்க வேண்டிய ஒரு முன்னேற்றம். அதற்காக இதுபோன்ற வாழ்வாதாரங்களை நாம் கெடுக்க வேண்டுமா? இன்று கிட்டதட்ட எல்லா கிராமங்களிலும் பழைய நீராதாரங்களான ஆறுகள், ஏரி, குளம், குட்டை, கிணறுகள் என எல்லாம் கவனிப்பாரற்றுத்தான் உள்ளன. ஒரு நாள் குழாயில் நீர் வரவில்லை என்றால் இந்த நீராதாரங்களை நாம் திரும்ப உபயோகிக்குமளவிற்கு நாம் இவைகளை பராமரித்தால் வருங்காலம் ஒளிமயம் இல்லையேல் குறைந்து வரும் மழையளவு, புவிவெப்பத்தால் நீரின் தேவை, பெருகிவரும் மக்கள் தொகை, அதிவேக பொருளாதார வளர்ச்சி போன்ற காரணங்களால் நாம் பாதிக்கப்பட போகிறாம் என்பதில் ஐயமில்லை.
இதுபோன்ற நீராதாரங்களை நோக்கி ஆண்டாண்டு காலமாக பறந்த வந்து இனப்பெருக்கம் செய்து வந்த வெளிநாட்டுப் பறவையினங்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும், ரஷ்ய நாட்டு பறவையினங்கள் சில வருடங்களாக வருவதில்லை எனவும் பறவை வல்லுனர்கள் கூறுகிறார்கள். காரணம் அசுத்தமான நீர்நிலைகள், சுத்தம் செய்ய இயற்கை தந்த மீன்கள் இல்லாமை என்று காரணம் கூறலாம். ஆனால் ஒரு கிராமத்தின் தன்னிறைவிற்கும், இந்நீராதாரங்களை காப்பாற்றி அடுத்த தலைமுறைகளுக்கு தருவதற்கும் பணம் மாத்திரம் போதாது மனமும் வேண்டும்.
நண்பரே உங்கள் பதிவு அருமை. நான் உங்கள் பதிவுகள் பற்றி என் பதிவிலே எழுதி உள்ளேன் முடிந்தால்
ReplyDeleteபடித்து விட்டு செல்லவும் http://vennirairavugal.blogspot.com/2010/03/blog-post_05.html
very good news. all member's watch to our pot,well,lake
ReplyDeleteநீர் ஆதாரங்கள் வற்றிவிட, அவை கொஞ்சம் கொஞ்சமாக அரசியல் கட்சியினரால் ஆக்ரமிக்கப்பட்டு கட்டிடங்கள் ஆகிக்கொண்டு இருக்கின்றன.:(((
ReplyDelete"வெண்ணிற இரவுகள்"
ReplyDelete"நிகழ்காலத்தில்" ஆகிய இரு வலைப்பூக்களின் பதிவர்களுக்கும்,
திரு. சிவசங்கர் அவர்களுக்கும்
உங்கள் வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி. வெண்ணிற இரவுகள் வலைப்பூவை நிச்சயம் படிப்பேன்.
"நான் உங்கள் பதிவுகள் பற்றி என் பதிவிலே எழுதி உள்ளேன்"
மேலும் சிலருக்கு விஷயம் சென்றடையும். உங்கள் பதிவிற்கு மிக்க நன்றி.