நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு.
தண்ணீருக்கு ஆயுதப் பாதுகாப்பு
அவுரங்காபாத், ஆக.17-
பீகாரில் வறட்சி மாவட்டங்களாக அறிவிக்கப்பட்ட 26 மாவட்டங்களில் நிலைமை தீவிரமடைந்துள்ளது. உயிருடன் இருக்கின்ற நீர்நிலைகளை ஆயுதமேந்திய மக்கள் காவல் காத்து வருகின்றனர். மழை பொய்த்ததால் துப்பாக்கி பொழிகின்றன.
விவசாயிகளாகிய நாங்கள் கிடைக்கும் கொஞ்ச நீரையும் பாதுகாக்க போராட வேண்டியுள்ளது. விவசாயக் கருவிகளைக் கட்டும் போதே துப்பாக்கியையும் சேர்த்துக் கட்டுகிறோம். வயலில் விவசாயக் கருவிகளைப் பயன்படுத்துகிறோம். தேவைப்பட்டால் துப்பாக்கியையும் பயன் படுத்துவோம் என்று பீகார் அவுரங்காபாத் மாவட்ட விவசாயி பால்பூஷண் சர்மா கூறுகிறார்.
மழை இல்லை, ஓடைகளில் தண்ணீர் வற்றி வருகிறது. இருக்கும் நீரைப் பாதுகாக்க விவசாயிகள் உயிரைப் பணயம் வைக்கிறார்கள். அண்டை கிராமத்தார், கிடைக்கும் சிறிதளவு நீரை தங்கள் பக்கம் திருப்ப முயல்வதைத் தடுக்கவே துப்பாக்கியுடன் வயலில் நிற்பதாக அவர்கள் கூறுகின்றனர்.
பீகாரில் உள்ள 79.46 லட்சம் ஹெக்டேர் விளை நிலங்களில் 45.67 லட்சம் ஹெக்டேரில் விவசாயம் நடைபெறுகிறது. பீகார் மாநிலத்தில் 20 சதவீத கால்வாய்கள் பயனற்று விட்டன. 39 சதவீத மழை பொய்த்ததால் பயனளிக்கும் கால்வாய்களில் 40 சதவீதக் கால்வாய்களில் மட்டும் தண்ணீர் அதுவும் மிகக் குறைந்த அளவே உள்ளது.
வறுமையில் வாடும் பல லட்சக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரம் மழை இன்மையால் பறிக்கப்பட்டதால் அவர்களின் வாழ்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. ஓராண்டு காலம் விவசாயம் இன்றிப் பரிதவிக்கும் அவலநிலை இது வரை ஏற்பட்டதில்லை.
பீகாரின் வளமிக்க 90 சதவீத விளை நிலங்களில் உணவு தானியங்கள் பயிரி டப்படுகின்றன. மழை பொய்த்ததால் அல்லது போதுமான அளவு பெய்யாததால் விவசாயிகளின் துயரம் அதிகரித்துள்ளது. தண்ணீரைக் காக்க ஏந்தும் விவசாயிகள், துப்பாக்கி தங்கள் வறுமையைத் தவிர்க்க வன்முறையில் இறங்கமாட்டார்கள் என்பது நிச்சயமில்லை.
Source : தீக்கதிர் கோவை 18-08-09
kindly visit
ReplyDeletehttp://vijaykavithaigal.blogspot.com/
நிலத்தின் ஈரம் காய்வது கூட தெரியாமல் வாழும் நமது வாழ்கை முறையை கவிதையாய் மிக தெளிவாக கூறியிருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்
ReplyDeleteThanks Friend
ReplyDeleteவெளுக்காத (விவ)சாயம்
வெண்மை புரட்சி
நாட்டுகாளைகளுக்கு காயடித்தது
பசுமை புரட்சி
விவசாயிகளுக்கு நோயடித்தது
உலகப்போரின் மீதம்
உரமானது
மண்ணின் மேனி
ரணமானது
சோறுடைத்த உழவன்
உயிர் மாய்த்தது வரலாறு
அம்பது கிலோ யூரியா
நாற்பது மூட்டை விளைச்சல் அறிவியல்
காரில் உழவன்
கான்வென்ட்டில் அவன் குழந்தை
இது எனது கனவியல்.
நிஜ வாழ்கையின் விபரீதத்தை கவிதையாய் படிக்கும் போது மனம் கனத்துபோவது உண்மை. அதனை அறிந்தும் நாமெக்கென்ன என்று இருப்போரைப் பார்க்கும் போது கவலை அதிகமாகிறது.தொடருங்கள் உங்கள் பணியை. சூழ்நிலை அவர்களையும் கண்டிப்பாக மாற்றும் என்பதே காலதேவன் சொன்ன உண்மை.
ReplyDeleteThank u very much friend. your wonderful motivation made me to work even hard. once again thanks.
ReplyDelete