Wednesday, March 11, 2009

தனியார் நிலங்களில் சந்தனமரம் வளர்க்க தமிழக அரசின் புதிய அரசாணை.

சந்தனமரம் வளர்ப்பு என்றாலே மக்கள் மனதிலே ஒரு பயம். சட்ட சிக்கல்(குறிப்பிட்ட அளவு வைத்திருப்பதற்குகூட சான்று வேண்டும்.), திருடர் பயம் (சமயத்தில் உயிருக்கே ஆபத்து), தாமாக விற்கமுடியாது என்ற நிலைமை போன்ற காரணங்களால் சந்தனமர வளர்ப்பை யாரும் விரும்புவதில்லை. ஆனால் இதன் தேவை மற்றும் வருமானம் மிக மிக அதிகம். தென்னிந்தியாவிலே வறட்சியை தாங்கி நன்கு வளரும் சந்தனமர வளர்ப்பை தற்போது ஆஸ்திரேலியாவில் பொருளாதார நோக்கில் வளர்க்க ஆரம்பித்துள்ளனர். வருங்காலத்தில் இது கண்டிப்பாக நம்மை பாதிக்கும்.

தமிழகத்திலும் பரவலாக வளர்க்க ஆரம்பித்துள்ளனர். கோவை அருகே 10,000 சந்தனமரங்களை ஒருவர் வளர்த்து வருகிறார் என்பது மகிழ்ச்சியை தருகிறது. தமிழக வனத்துறை தனியார் நிலங்களில் சந்தனமரம் வளர்க்க ஊக்குவிப்பதோடு , சட்ட சிக்கலில்லாமல் வளர்த்து சந்தைப்படுத்துவதை எளிமையாக்கி தனியார் பயன் பெற புதிய அரசாணையையும் வெளியிட்டுள்ளனர். எனவே உழவர் பெருமக்கள் இந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொள்வோம்.

அரசாணை காண.

9 comments:

  1. அரசின் நல்ல செய்தி. அது ஏன் சந்தன மரத்திற்கும் மட்டும் இப்படிப்பட்ட கட்டுப்பாடுகள் இருக்கின்றன என்று விளக்க இயலுமா ?

    ReplyDelete
  2. நல்ல செய்தி. விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.

    சந்தன மரத்துக்கு மட்டும் ஏன் இத்தனைக் கட்டுப்பாடுகள் ?

    ReplyDelete
  3. திரு.தங்கவேல் மாணிக்கம்

    உங்கள் வருகைக்கு நன்றி.அதிக விலைமதிப்பின் காரணமாக இதன் எண்ணிக்கை அரிதாகி கொண்டே வருகிறது. இதனை பாதுகாக்க இந்த கட்டுபாடுகள் அவசியமாகின்றது.அதேபோன்று ஈட்டி, தேக்கு, சில்வர் ஓக் போன்ற மரங்களுக்கும் கட்டுபாடுகள் உண்டு.

    ReplyDelete
  4. மடகஸ்காரில்; சில பிரான்சின் வாசனைத் திரவிய உற்பத்தியாளர்கள்; அங்குள்ள பலரை வளர்க்க ஊக்கப்படுத்தி ;அதை விலைக்கு வாங்கி அங்குவைத்தே சந்தனத் தைலம் தயாரித்து; பாரிசுக்குக்
    கொண்டுவந்து; வாசனைத் திரவியங்களுக்குக் கலந்து நல்ல லாபமீட்டுவதுடன்; மடகஸ்கார் பயிரிடுவோரும்
    நன்கு பயன் பெறுவதாக தொலைக்காட்சியில் பார்த்தேன்.
    நிச்சயம் தமிழ்நாட்டிலும் சட்டச் சிக்கலை தீர்த்து உரிய வரிகளை நிர்ணயித்தால்; மக்கள் ஆர்வத்துடன்
    வளர்ப்பார்கள்...வாசனைத் திரவிய உற்பத்தியாளர்கள் உரிய விலை கொடுத்து வாங்குவார்கள். பொருளாதாரம் வளமாவதுடன்....கடத்தலும் குறையும்.

    ReplyDelete
  5. திரு.யோகன் பாரிஸ்

    உங்கள் வருகைக்கு நன்றி.

    "மடகஸ்காரில்; சில பிரான்சின் வாசனைத் திரவிய உற்பத்தியாளர்கள்; அங்குள்ள பலரை வளர்க்க ஊக்கப்படுத்தி ;அதை விலைக்கு வாங்கி அங்குவைத்தே சந்தனத் தைலம் தயாரித்து; பாரிசுக்குக் கொண்டுவந்து; வாசனைத் திரவியங்களுக்குக் கலந்து நல்ல லாபமீட்டுவதுடன்; மடகஸ்கார் பயிரிடுவோரும்
    நன்கு பயன் பெறுவதாக"

    எனக்கு இது புதிய தகவல்.நான் ஆஸ்திரேலியாவில் மட்டும் தான் வளர்க்கிறார்கள் என்று இருந்தேன். அரசும் மக்களும் இணைந்து செயலாற்றவேண்டிய நேரமிது. முடிந்தால் இதுபற்றி ஒரு பதிவிடுங்கள்.

    ReplyDelete
  6. உபயோகமான தகவல்...நன்றி

    ReplyDelete
  7. திரு.லட்சுமணன்

    உங்கள் வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  8. thangamani palanisamyDecember 20, 2010 at 1:14 PM

    தங்கள் பிளாக் படித்தேன் .நான் சந்தன மரம் வளர்க்க விரும்புகிறேன் .மேலும் சந்தனமரம் பற்றி விரிவாக சொல்ல முடியுமா ! நன்றி

    தங்கமணி ,மங்களம்

    ReplyDelete
  9. உங்கள் வருகைக்கு நன்றி. விரைவில் பதிவிடுகிறேன்.

    ReplyDelete