பொதுவாக ஈரியோபைட் (Eriophyte mite )தாக்கிய தென்னங்காய்களில் மட்டை எடுப்பதென்பது சற்று கடினமே. எனவே மட்டை எடுப்பவர்கள் இதனை தவிர்க்க முயல்வர் அல்லது அதிக கூலி கேட்பார்கள் இல்லையேல் யாருக்கும் உதவாமல் வீணாகும். விவசாயிகளுக்கு இதில் மேலும் நஷ்டம். நல்ல காய்களை மட்டை எடுக்க ஒரு காய்க்கு 40 பைசா வரை செலவு ஆகின்றது. அவ்வாறு அதிக கூலியின்றி 1 மணி நேரத்தில் இரு நபர்கள் சுமார் 500 - 600 காய்களை 10 பைசா (ஒரு காய்க்கு) செலவில் மிக எளிதாக (சிறுவர்,பெண்கள் கூட இயக்கலாம் என்பது இதன் சிறப்பு) வெட்டும் கருவியொன்றை கண்டுபிடித்து உபயோகித்து சாதனை செய்து கொண்டிருப்பவர் திரு.சுப்பையன்.


இவரது பதப்படுத்தப்பட்ட குதிரைமசால் என்ற தீவனம் சென்னை,பெங்களூரூ, புனே,கொடைக்கானல் மற்றும் உதகை,குன்னூர் போன்ற நகரங்களில் வளர்க்கப்படும் குதிரைகளுக்கு உணவாக விரும்பி வாங்கப்படுகிறது. வேலையின் மதிப்பை உணர்ந்த இவரிடம் வேலை செய்யும் மணியளவைப் பொறுத்து வேலையாட்கள் கூலி பெறலாம் என்பது ஆச்சரியமான நடைமுறை உண்மை. மிகத் துல்லியமாக பயிர்களின் வரவு செலவுகளை கணக்கிடும் இவரிடம் நாம் மனித வள நிர்வாகம், நிதி நிர்வாகம், சந்தை நிர்வாகம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, கருவிகள் கண்டுபிடிப்பு என நிறைய தெரிந்து கொள்ளலாம்.
தொடர்பிற்கு :-
திரு.R. சுப்பையன்
கணக்கன் தோட்டம்
அத்தப்பகவுண்டன் புதூர் (அஞ்சல்)
இருகூர் (வழி)
கோவை.
தொலைபேசி : 0422-2627072
அலைபேசி : 93600 27072
தொடர்பிற்கு :-
திரு.R. சுப்பையன்
கணக்கன் தோட்டம்
அத்தப்பகவுண்டன் புதூர் (அஞ்சல்)
இருகூர் (வழி)
கோவை.
தொலைபேசி : 0422-2627072
அலைபேசி : 93600 27072
ஆனால் நாம் நமக்கு சாதகமானதை மட்டுமே எடுத்துக் கொண்டு மற்றவைகளை அழிக்கிறோம் முடியாவிட்டால் தூற்றுகிறோம். ஒவ்வொரு தொழிலுக்கும் வல்லுனர்களை (Specialist) தேடும் நாம் மண்புழுக்களுக்கு மட்டும் சர்சையிடுகிறோம். இதனால் விவசாயிகள் குழப்பம் அடைகின்றனர் என்பதே உண்மை. விவசாயநிலங்களில் நாட்டுபுழுக்களையும், விவசாய கழிவுகளை விரைவாக மறுசுழற்சி செய்யவும், நகரகழிவுகளை மறுசுழற்சி செய்யவும் ஆப்ரிக்க இன மண் புழுக்களையும் உபயோகிப்பதில் தவறில்லை என எண்ணுகிறேன். இல்லையேல் அதுவே (குப்பைகள்) சுற்றுசுழலுக்கு மாசுபாடுள்ளதாக மாறிவிடக்கூடாது. சென்ற வருடம் எர்ணாகுளம் நகரில் அரசு விடுமுறை அறிவித்து நகர குப்பைகளை அகற்றியதை மறந்துவிடாதீர்கள். மக்கள் தொகை பெருக்கத்தில் குப்பைகள் மலையளவு விரைவில் சேர்ந்துவிடுகிறது. தீர்வு??? மாண்பு மிகு மண்புழுக்கள்தான். கோவையில் நகர கழிவுகளை மண்புழுக்கள் கொண்டு வியாபார ரீதியில் மண்புழு உரம் தயாரிக்கிறார்கள்.
சுமார் 1 அடிக்கு மேலுள்ள மண்புழுக்கள்.












1991-92 ஆண்டுகளில் முதலிடத்திலிருந்த தமிழகம் அவ்விடத்தை இழந்துவிட்டது. மீண்டும் அவ்விடத்தை அடைய முயற்சிக்க வேண்டும். தேனீ வளர்ப்பை துவங்க விருப்பமுள்ளவர்களுக்கு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் பூச்சியியல் துறை பேராசிரியர் மெ. முத்துராமன் அவர்களின் 






