Friday, September 14, 2007

அழிவின் விளிம்பிலுள்ள உயிரினங்கள் 2007.

இயற்கை ஆயிரமாயிரம் தாவரங்களையும்,உயிரினங்களையும்,படைத்து பாதுகாத்து வந்துள்ளது. ஆனால் கடந்த இரு நூற்றாண்டுகளாக மனிதன் தன் அறிவினாலும், ஆராய்ச்சிகளாலும், துணிச்சலான பயணங்களாலும் தொழிற்புரட்சியை தொடக்கி தன் அடங்கா ஆசைகளுக்கு வித்திட்டு கண்டங்களை கண்டுபிடித்து தங்களுக்கள் சண்டையிட்டு மடிந்தான். பின்பு சட்டங்களையும், திட்டங்களையும் இட்டு தன் அழிவை குறைத்து வியாபார நோக்கில் வேட்டையாடுதல், மரம் வெட்டுதல்,வேளாண்மைக்கு காடுகளை அழித்தல், சாலை, சுரங்கம், அணைகள் அமைத்தல் என இயற்கையை சிதைத்தான். விளைவு ? எண்ணற்ற உயிரினங்கள் அழிந்து வருகின்றன. அவ்வாறு அழிந்து வரும் உயிரினங்களை IUCN என்ற அமைப்பு கண்டுபிடித்து 2007 ஆண்டிற்கான அழிவின் விளிம்பிலுள்ள உயிரினங்களை (Red list)புகைபடமாக, வீடியோவாக வெளியிட்டுள்ளது.அவற்றின் வீடியோ காட்சி கீழேயுள்ளது. அடுத்த தலைமுறைக்கு கொடுக்க நாம் அவைகளை பாதுகாக்க வேண்டும்.

வீடியோ காட்சி arkive .org என்ற அமைப்பிற்கு சொந்தமானது. அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்ளுகிறேன். மக்களுக்கு தெரியவேண்டுமென்பதற்காக பதிவிலிடுகிறேன்

3 comments:

  1. வீடியோ சூப்பர். அழிந்து கொண்டிருப்பதை கண்ணிலாவது பார்போம்.

    ReplyDelete
  2. சுற்றுச் சூழல் என்ற முக்கியமான தலைப்புக்கு என தனிப்பதிவாக தொடர்ந்து நடத்தி வருவதற்கு நன்றி

    ReplyDelete
  3. திரு.குப்புச்சாமி, திரு.ரவிசங்கர்,
    தங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete