![]() |
விவசாயிகளின் அமர்வில்
மரம், மூங்கில் இவற்றின் வளர்ப்பு மற்றும் சந்தைபடுத்துவதிலுள்ள பிரச்சனைகள்
உணர்ச்சிவயப்பட்டு அழுகையின் விளிம்பிற்கு சென்றது மனத்தை உருக்குவதாக இருந்தது.
ஆனால் அதிகாரிகள் அதற்கான தீர்வுகளை உடனே கூறியது ஆறுதலாக இருந்தது.
ஒவ்வொரு வருடமும்
தமிழகத்தை புயல் தாக்குவது வாடிக்கையான நிலையில் அலையாத்திக் காடுகளின் அவசியம்
பற்றிய விழிப்புணர்வு விவசாயிகளிடத்தில் சென்றடைய வேண்டியது அவசியமாகிறது. வரும்
வருடங்களில் அது நிறைவேறும் என்று எண்ணுகிறேன். ![]() |
| தூரத்திலிருந்தே மரத்தை அளக்கும் கருவி பச்சை புள்ளிகளை கவனிக்கவும். |
வழக்கம் போல் கண்காட்சி
பயனுள்ளதாக இருந்தது. இம்முறை மூங்கிலில் மதிப்புக் கூட்டிய வேலைப்பாடுகள் நிறைந்த
பொருட்கள் மனதைக் கவர்ந்தது. மரத்தின் தரம் மற்றும் பருமனை அளக்க உதவும் கருவிகள்
பயனுள்ளதாக இருந்தது.
காகிதம், ஒட்டுப்பலகை,
தீக்குச்சி, பென்சில், எரிசக்தி மூலம் மின்சாரம், பயோ-டீசல் என்று தொழிற்சாலைகளுக்கு
தேவையான கச்சாப்பொருள் மரம்தான் என்று கூறினால்
அது மிகையில்லை.







