2004 ஆண்டு நோபல் விருது
பெற்ற முதல் ஆப்பிரிக்கப் பெண்மணி முனைவர்.வாங்கரி
மாத்தாய். பெண்கள் வேலை வாய்ப்பு மற்றும் முன்னேற்றம்,
சுற்றுச்சுழல், மனித உரிமை, வனங்களை உருவாக்கி எரிபொருள், சுத்தமான குடிநீர்
தருதல், அமைச்சர், கல்வி என்று பலதுறைகளில் கால் பதித்தவர். மிக வலுவான ஆளுமை படைத்தவர். அமெரிக்கா சென்று
படித்து பட்டம் பெற்றாலும் தாய்நாட்டின் முன்னேற்றத்திற்காக அனைத்தையும் துறந்து கென்யாவில் 1977-ல் கிரீன் பெல்ட் இயக்கத்தை நிறுவி அதன் மூலம் மரக்கன்று நடும்
பணியை செய்து
வந்தார். கென்யா முழுவதும் அவரது இயக்கம் கோடிக்கணக்கான மரக்கன்றுகளை நட்டு சாதனை படைத்துள்ளது. பின்நாட்களில் அது அவருக்கு
நோபல் பரிசை பெற்று தந்தது. ஆட்சியாளர்களின் சுரண்டல் மற்றும் மக்கள் விரோத போக்கினை எதிர்த்து சிறை சென்றவர். அவரது “I will be a Humming
bird” என்ற துண்டுப்படம் உங்களுக்கு
பிடிக்கும் என்று எண்ணுகிறேன்.
25-09-2011 அன்று புற்றுநோயால் மரணமடைந்தார். அவரதுமறைவு உலக சுற்றுச்சுழல்
இயக்கத்திற்கு பேரிழப்பாகும். இவ்வலைப் பூ அன்னாரது மறைவிற்கு ஆழ்ந்த அனுதாபத்தை
தெரிவிப்பதோடு அவரின் மூன்று குழந்தைகளுக்கு ஆறுதலையும் தர இறைவனை வேண்டுகிறது.














