Saturday, March 27, 2010

உலகத்திற்காக 1 மணி நேரம்( Earth hour )


இந்த அவசர உலகத்தில் உங்களிடத்திலே கேட்பதற்கு சற்று தயக்கமாகத்தான் உள்ளது. காரணம் T20 கிரிகெட், குழந்தைகளின் ஆண்டுத்தேர்வுகள் என முக்கியமான நிகழ்வுகள் இருக்கும் போது இடையில் உங்கள் 1 மணி நேரத்தை கேட்க கூடாதுதான் ஆனால் இப்பொழுது நாம் அனுபவித்துக் கொண்டிருக்கும் இந்த வாழ்க்கை முறை இன்னும் கொஞ்ச நாட்களுக்கு நாம் அனுபவிக்க வேண்டும், நம் குழந்தை அனுபவிக்க வேண்டும். இந்த நேரத்தில் குழந்தைகளுக்கு விழிப்புணர்வும் தேவை. அதற்காக இன்று இரவு 8.30 மண் முதல் 9.30 மணி வரை உங்கள் மின்சாதனங்களை நிறுத்தி உலகத்திற்காக 1 மணி நேரம்( Earth hour ) கடைபிடியுங்கள். நிறைய நாடுகளில் இன்று கடைபிடிக்கவுள்ளனர். நாமும் செய்வோமா ??
மேலும் விபரம் பெற : -

Thursday, March 25, 2010

ஆயுதமாக மாறுகிறது உலகின் காரமான மிளகாய் (பூட் ஜோலோகியா )

குவாகாத்தி, மார்ச் 24-இநதியாவின் வடகிழக்கில் உற்பத்தியாகும், உலகிலேயே மிக மிகக் காரமான மிளகாய் என்று கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்ற பூட் ஜோலோகியா மிளகாய், இந்திய ராணுவத்தின் ஆயுதத் தயாரிப்பில் மூலப் பொருளாக மாறுகிறது. கைபெருவிரல் பருமனுள்ள பூட் ஜோலோ கியாவை கண்ணீர்ப் புகைக் குண்டு போன்ற கையெறி குண்டுகளில் பயன்படுத்துவதென இந்திய ராணுவம் முடிவு செய்துள்ளது. இதற்குரிய சோதனைகள் வெற்றிகரமாக முடிந்துள்ளன. சந்தேகத்துக்குரிய நபர்களைச் செயலற்றுப் போகவைக்க இந்த மிளகாய் கலந்த குண்டுகள் பயன்படுத்தப்படும். 2007ம் ஆண்டில் கின்னஸ் சாதனைப்பட்டியலில் உலகிலேயே மிகக் காரமான மிளகாய் என்று பூட் ஜோலோகியா இடம் பெற்றுள்ளது. வடகிழக்குப் பகுதிகளில் இவை உணவுக்காகவும், ருசிக்காகவும் ஏராளமாக விளைவிக்கப்படுகின்றன. வயிற்றுக் கோளாறுகளுக்கும், வெயிலின் உக்கிரத்தைக் குறைக்கும் மருந்தாகவும் இது பயன்பட்டு வருகிறது. மிளகாயின் காரத்தை "ஸ்கோவில்லி" என்ற அலகுகளால் கணக்கிடுகிறார்கள். பூட்ஜோலோகியாவில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட "ஸ்கோவில்லி" அலகுகள் உள்ளன. பாரம்பரியமான டாபஸ்கோ சாஸில் 2500 முதல் 5000 ஸ்கோவில்லி அலகுகள் உள்ளன. இந்தியாவின் ஜாலபெனோ மிளகில் 2500 முதல் 8000 ஸ்கோவில்லி அலகுகள் உள்ளன. “இந்திய பாதுகாப்பு சோதனைச் சாலைகளில் நடத்தப்பட்ட சோதனையில் இந்த மிளகாய் கையெறி குண்டு பயன்படுத்தத்தக்கது என்று கண்டறியப்பட்டுள்ளது. இதை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பும் உறுதி செய்துள்ளது என்று அசாமில் உள்ள ராணுவ செய்தித் தொடர்பாளர் கர்னல் ஆர்.காளியா கூறியுள்ளார்.இது ஒரு கூர்மையான விஷத்தன்மையற்ற ஆயுதமாகும். இதனுடைய காரமான நெடி பயங்கரவாதிகளைத் திணறடிக்கும்; பதுங்குமிடங்களை விட்டு வெளியேற வைக்கும் என்று டிஆர் டிஓ தில்லி தலைமையகத்தின் ஆயுள் அறிவியல் துறை தலைவர் ஆர்.பி.ஸ்ரீவத்சவா கூறினார். காவல்துறையின் பயன்பாட்டுக்கும், பெண்கள் பயன்பாட்டுக்கும் உரிய வகையில் இதனைத் தயாரிக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன என்றும் அவர் கூறினார்.

எனது பழைய பதிவைகளைக் காண :-
http://maravalam.blogspot.com/2007/11/blog-post_10.html
http://maravalam.blogspot.com/2009/11/blog-post_06.html

Source : தீக்கதிர்/கோவை 24-03-2010

Monday, March 22, 2010

தண்ணீர் பற்றிய பதிவுகளின் தொகுப்பு.

உலக தண்ணீர் தினம் பற்றி சென்ற ஒரு வாரமாக பதிவிட்ட அனைத்து பதிவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி.. உண்மையில் எதிர்பார்த்ததை விட அதிக எண்ணிக்கையில் பதிவுகள் இருந்தது மகிழ்ச்சி. ஆனால் வருடத்திற்கு ஒரு நாளாக கடைபிடிக்காமல் அதன் அவசியம் உணர்ந்து அடிக்கடி பதிவிடுவோம். தண்ணீர் சிக்கனத்தை கடைபிடிப்போம் தூய்மை காப்போம். தண்ணீர் சம்பந்தபட்ட அனைத்து பதிவுகளுக்கும் தொடுப்பு தந்திருக்கிறேன். அனைவரையும் ஒரு முறை இந்த பதிவுகளை படிக்கும்படி அழைக்கிறேன். “எதிர்நீச்சல்” அவர்களின் திரட்டி இதில் அதிகம் உபயோகப்பட்டது. அவருக்கு உங்கள் சார்பாகவும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்ளுகிறேன். யாருடைய பதிவாவது விடுபட்டு இருந்தால் கோபித்துக் கொள்ளாமல் தெரிவியுங்கள் தொடுப்பு தந்துவிடலாம்.

முத்துலெட்சுமி
http://sirumuyarchi.blogspot.com/2010/03/blog-post.html

தீபா
http://deepaneha.blogspot.com/2010/03/blog-post_16.html

ராமலக்ஷ்மி
http://tamilamudam.blogspot.com/2010/03/blog-post_13.html

முகுந்த் அம்மா
http://mukundamma.blogspot.com/2010/03/blog-post_13.html

கோமதி அரசு
http://mathysblog.blogspot.com/2010/03/blog-post_14.html

நீச்சல்காரன்
http://www.google.com/reader/shared/neechalkaran

ஆதிமூலக் கிருஷ்ணன்
http://www.aathi-thamira.com/2009/03/blog-post_25.html

மாதேவி
http://ramyeam.blogspot.com/2010/03/blog-post.html

சேட்டைக்காரன்
http://settaikkaran.blogspot.com/2010/03/blog-post_17.html

சந்தனமுல்லை
http://sandanamullai.blogspot.com/2010/03/blog-post_15.html

அமைதிச்சாரல்
http://amaithicchaaral.blogspot.com/2010/03/blog-post_17.html

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║
http://palaapattarai.blogspot.com/2010/03/blog-post_16.html

இளங்கோ
http://ippadikkuelango.blogspot.com/2010/03/blog-post_17.html

ஹுஸைனம்மா
http://hussainamma.blogspot.com/2010/03/blog-post_18.html

சிநேகிதன்
http://sinekithan.blogspot.com/2010/03/blog-post_21.html

KTM J. நிஷார்
http://ktmnizar.blogspot.com/2010/03/22-03-2010.html

ஆனந்தராஜ்
http://organicananth.blogspot.com/2010/03/blog-post_8325.html

நாகராஜன்
http://earth-nagarajan.blogspot.com/2010/03/international-water-day22032010.html

சாரதா
http://inspired-treasures.blogspot.com/2010/03/blog-post_22.html

சே.இராஜா ராமன்
http://ethirneechal.blogspot.com/2010/03/joy.html

பாலைவனத் தூது
http://paalaivanathoothu.blogspot.com/2010/03/blog-post_4260.html


தமிழ் உதயம்
http://tamiluthayam.blogspot.com/2010/03/blog-post_22.html

Er Rajamanickam
http://gnalam.blogspot.com/2010/03/blog-post_2453.html

ஸ்ரீ
http://enthamizh.blogspot.com/2010/03/blog-post_2582.html

Vitalresource
http://vital-resource.blogspot.com/2010/03/blog-post_22.html

ilankainet
http://www.ilankainet.com/2010/03/22.html

ஆ 'சிரி' யர்கள்
http://engalblog.blogspot.com/2010/03/blog-post_21.html

அக்பர்
http://sinekithan.blogspot.com/2010/03/blog-post_21.html

சிரவணன்
http://siravanan.wordpress.com/2010/03/21/toilet-queue/

கடையம் ஆனந்த்
http://manam-anandrey.blogspot.com/2010/03/blog-post.html

அம்பிகா
http://ambikajothi.blogspot.com/2010/03/blog-post_19.html

நான் ஆதவன்
http://nanaadhavan.blogspot.com/2010/03/blog-post.html

abi
http://abisiva.blogspot.com/2010/03/environment.html

சி.முருகதாஸ்
http://cmurugadoss.blogspot.com/2010/03/blog-post_12.html

மதார்
http://mathar-itsallaboutmine.blogspot.com/2010/03/blog-post_18.html

க.நா.சாந்தி லெட்சுமணன்.
http://andamantamizhosai.blogspot.com/2010/03/blog-post_16.html

வைகையின் சாரல்
http://nirmalbabu.blogspot.com/2010/03/22.html

இந்நேரம்.காம்
http://www.inneram.com/201003187262/raising-water-shortage-public-protest-on-the-road

ஈரோடு கதிர்
http://maaruthal.blogspot.com/2010/04/blog-post.html

வின்சென்ட்
http://maravalam.blogspot.com/2010/03/blog-post_10.html
http://maravalam.blogspot.com/2010/03/17000-63.html
http://maravalam.blogspot.com/2010/03/blog-post_22.html
http://maravalam.blogspot.com/2010/03/blog-post_17.html
http://maravalam.blogspot.com/2010/03/40.html

இந்தியாவில் தண்ணீர் உபயோகம் - ஓரு பார்வை.


3 % வீட்டு உபயோகிப்பாளர். அரசாங்கத்தின் முன்னுரிமை இவருக்குத்தான் என்றாலும் பன்னாட்டு கம்பெனிகள் இவரிடம் தான் தங்கள் கை வரிசையை காட்டுகிறார்கள். இயற்கையின் பொக்கிஷமான நிலத்தடி நீரை உறிஞ்சி நம் ஆட்களைக் கொண்டு சுத்தம் செய்து பாட்டில்களில் அடைத்து கொள்ளை லாபத்தில் விற்று விடுகிறார்கள்.


நன்றி : 2006 ஆண்டு ஏப்ரல் 21 Front line இதழ்

சுத்தம் கருதி வாங்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் இல்லையேல் மருத்துவு செலவு கூடிவிடுகிறது.

5 % தொழிற்சாலை உபயோகிப்பாளர். . அரசாங்கத்தின் முன்னுரிமையில் மூன்றாவதாக வருபவர். இவரிடம் பணம், பதவியிருப்பதால் பாதாளம் வரை சென்று பிரச்னைகளை குறைத்து கொள்கிறார். இவரது செயல்கள் அத்துமீறும் போது சட்டங்கள் இவரை பாதிக்கின்றது. நமது நீராதரங்களை மிக அதிகமாக மாசுபடுத்துபவர் இவரே. சமூக அக்கரையின்றி லாபம் மட்டுமே இவரது குறிகோளாக இருப்பதால் தமிழகத்தில் திருப்பூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல், ஆம்பூர் போன்ற நகரங்கள் சாயம் மற்றும் தோல் பதனிடும் தொழிற்சாலைகளால் அதன் நீர்வளம் கெட்டது உண்மை. லாபத்தோடு சமூக அக்கரையிருந்தால் நல்ல எதிர்காலம் இந்தியாவிற்கு உண்டு.

92 % விவசாய உபயோகிப்பாளர். திருவள்ளுவர் காலத்தில் இவரை மற்றவர்கள் தொழுது கொண்டிருந்தது போய் தற்சமயம் இவர் மற்றவர்களை தொழுது கொண்டிருக்கிறார். படிக்காத மேதைகள் உண்டு ஆனால் வெளிச்சம் அவர்கள் மேல்படுவதில்லை. எளிதாக ஏமாற்றப்படுபவர். நேர்மை, தன்மானம் நிறைய உள்ளதால் சொற்ப தொகைக்குக் கூட உயிரை மாய்த்துக் கொள்வார். இவர் நாட்டின் முதுகெலும்பாக இருப்பதால் சில யுக்திகளை கடைபிடித்தாலே மிக பெரிய மாற்றத்தை உண்டாக்க முடியும்.

இயற்கை விவசாயத்திற்கு மாறுவது.
பண்ணை குட்டை அமைத்தல்.
சொட்டு நீர் பாசனம்
துல்லிய பண்ணை விவசாயம்.
பசுமை குடில் விவசாயம்
மரம் வளர்ப்பு
தண்ணீர் வசதிகேற்ற பயிர்கள் .
வறட்சியை தாங்கி வளரும் பாரம்பரிய பயிர்களை பாதுகாப்பது.

புழுதிநெல் சாகுபடி (http://maravalam.blogspot.com/2010/01/blog-post_21.html )

எனது வெர்சுவல் வாட்டர் ( Virtual Water ) என்ற பதிவை அவசியம் படியுங்கள்.
http://maravalam.blogspot.com/2008/09/blog-post.html

அனைவருமே நீர் உபயோகத்தை குறைத்து கொள்வது, மறுஉபயோகம், மறுசுழற்சி செய்தால் (Reduce, Reuse and Recycle ) வருகின்ற தலைமுறைக்கு நல்லது.

Saturday, March 20, 2010

உலக வனநாள் - தமிழக மாவட்டங்கள்

ஆரோக்கியமான உலகிற்கு வனபகுதி 33% இருக்கவேண்டும் என்பது நியதி.. ஆனால் தமிழகத்தில் 10% கீழுள்ள மாவட்டங்களும் அதன் சதவீதமும் கீழே உள்ளது. இம்மாவட்டங்கள் கடற்கரையோரமாக இருப்பதும் அல்லது நல்ல தண்ணீர் வசதியுள்ள மாவட்டங்களாக இருப்பதும் உண்மை. 33% மேலுள்ள மாவட்டங்கள் 2 மட்டுமே. இன்று உலக வனநாள். 10% கீழுள்ள மாவட்டங்களை மேன்மை படுத்துவோம். இல்லையேல் சுனாமி, புயல் வரும் போது இம்மாவட்டங்கள் பாதிப்படைவதை நாம் பார்க்கிறோம்.

2007 வருட கணக்கின்படி.
Source : http://www.fsi.nic.in/sfr_2009/tamilnadu.pdf

உலக சிட்டுக்குருவிகள் தினம்

மறைந்து வரும் சிட்டுக் குருவியிகளை காப்பாற்ற இந்த வருடம் முதல் உலக வீட்டு சிட்டுக்குருவி தினமாக 20-03-2010 (இன்று) அறிவித்து உலகம் முழுவதும் கொண்டாடவுள்ளனர்.

http://www.worldhousesparrowday.org/

எண்பதுகளின் பிற்பகுதியில் புதிதாக வீடுகட்டி வந்த போது சுமார் 300 மீட்டர் தூரத்திற்கு வீடுகள் இல்லை. எங்கள் வீடு மட்டுமே. காலை, மாலை நேரங்களில் நூற்றுக்கும் அதிகமான சிட்டுக்குருவிகள் இனிய சத்தத்துடன் வீட்டை சுற்றியிருக்கும். எங்கள் அம்மாவும் அவைகளுக்கென சில தானியங்களை வாங்கி போடுவார்கள். மனிதர்களுடன் ஒன்றி வாழும் அவைகளில் சில பயமின்றி வீட்டிற்குள் வந்து நிலைக் கண்ணாடியில் தன் பிம்பத்தை பார்த்து அதனுடன் மோதிக்கொண்டிருக்கும். ஆனால் இப்போது அவைகள் இப்பகுதியில் இல்லை என்பதே உண்மை. இயற்கையின் அருளால் வேறு சுமார் 10 பறவையினங்கள் அதிகாலை முதல் மாலை வரை அதனதன் நேரத்திற்கு வந்து செல்கின்றன. ஆனாலும் சிட்டுக் குருவிகள் இல்லாதது மாபெரும் குறையே.

1. இரசாயான மருந்துகள் தெளிப்பு. ( நஞ்சு உணவு)
2. ஓட்டு வீடுகள் மாறி மாடிவீடுகள். ( கூடு கட்டுவதற்கு வசதியின்மை )
3. செல்போன் டவர்களின் கதிரியக்கம் ( முட்டைகள் பொறிப்பதில் சிக்கல்.)
4. வாகன இரைச்சல் ( அமைதியற்ற சுழல்.)

என காரணங்கள் கூறுகிறார்கள். ஆரோக்கியமான சுற்றுச் சுழல் ?????

நமது கண்களுக்கு மண்ணில் மண்புழுவும், மண்ணிற்கு மேல் மரங்களும், நீர் நிலைகளில் மீன்களும், ஆகாயத்தில் பறவைக் கூட்டங்களும் ஒரு பகுதியில் இருந்தால் அப்பகுதி ஆரோக்கியமாக உள்ளது என்பது இயற்கையின் பொது நியதி.
=================================================
வசந்த காலத்தில் வரவேண்டிய பறவையினங்கள் வராமல் போன காரணத்தை வெளிச்சம் போட்டு காட்டிய நூல் “மெளன வசந்தம்” ஆசிரியர் சுற்றுச்சுழல் விஞ்ஞானி ரேச்சல் கார்சன் ( The Silent Spring By Rachel Carson ). DDT யின் அழிவிலிருந்து காப்பாற்றிய, சுற்றுச்சுழலைப் பற்றிய விழிப்புணர்வை தந்து 1962 வருடமே உலகை திருப்பிப் போட்ட நூல். அனைவரது இல்லத்திலும் இருக்கவேண்டிய நால்.

இந்த நூலைப் படித்தால் ஏன் சிட்டுக் குருவிகள் மறைந்து வருகின்றன என்பதற்கு விடை கிடைக்கும் எனவே அவர் நினைவாக இந்த பதிவை வலையேற்றுகிறேன்.
படங்கள் உதவி : வலைதளம்

Wednesday, March 17, 2010

ஜீவனிழந்து கிடக்கும் யமுனை நதி.....

மீத்தேன் வாயு மெதுவாக வெளிக்கிளம்பிக் கொண்டிருக்கிறது. தேங்கிக் கிடக்கும் குட்டை போலக் காட்சியளிக்கும் இடங்களில் முட்டை விடுவது போல குமிழியை உருவாக்கி பிறகு உடைந்து அதன் மூலம் மீத்தேன் வெளியேறிக் கொண்டிருக்கிறது. அருகில் சென்றாலே குடலைப் பிடுங்கும் அளவுக்கு நாறிப் போய்க்கிடக்கிறது. புனித நதி என்றும், இந்துக்களால் கடவுள் என்றும் அழைக்கப்படும் யமுனை நதிதான் இவ்வாறு சீரழிந்து போய்க்கிடக்கிறது. ஒரு உணர்ச்சிப் பிரவாகத்தோடு ஓடிக் கொண்டிருந்தது போன்ற தோற்றத்தைக் கொண்டிருந்த யமுனை நதி, ஜீவனின்றிக் கிடப்பதுபோல தற்போது காட்சியளித்துக் கொண்டிருக்கிறது.

இத்தனைக்கும் மார்ச் 22 அன்று உலக தண்ணீர் தினத்தை உலகமே அனுசரிக்கப்போகிறது. ஆனாலும் இந்தியாவின் பெரிய ஆறுகளில் ஒன்றான யமுனை தனது உண்மைத் தன்மையை இழந்து நிற்கிறது. புதுதில்லியின் உயிர்நாடியான யமுனை நதி பெரும் அளவுக்கு மாசுபட்டுள்ளது. இது மக்கள் மத்தியில் போய்ச் சேராததற்கு காரணம், நதி தெரியாத அளவிற்கு பெரிய, பெரிய சுவர்களும், மேம்பாலங்களும், சாலைகளும், ஆலைகளும் கட்டப்பட்டுள்ளதாகும். ஒரு சில இடங்களில் மட்டும்தான் ஆற்றிற்கு மக்கள் செல்லும் வாய்ப்பு உள்ள நிலை ஏற்பட்டுள்ளது. புதுதில்லியைச் சேர்ந்த மக்களில்கூட 60 விழுக்காட்டினர்தான் யமுனை நதி ஓடுவதைப் பார்த்திருக்கிறார்கள் என்று கணக்கு சொல்கிறது ஸ்வேச்சா என்ற தொண்டு நிறுவனம். புதுதில்லியின் மக்கள் தொகை 1 கோடியே 40 லட்சமாகும்.

யாருமே யமுனையைப் பார்க்கவில்லை என்றால் அதை எப்படிப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் வரும் என்று கேள்வி எழுப்புகிறார் ஸ்வேச்சா அமைப்பின் செயல் இயக்குநரான விமலேந்து கே. ஜா. தில்லியை வந்தடையும்வரை யமுனை மிகவும் அழகாகத்தான் இருக்கிறது. தலைநகருக்கு வெளியே நீர் மிகவும் தெளிவாக உள்ளது. பறவைகள் நீருக்கு மேல் பறந்து கொண்டிருப்பது கொள்ளை அழகாகக் காட்சியளிக்கிறது. வலையைப் போட்டு மீன்களை அள்ளும் மீனவர்கள் மகிழ்ச்சியோடு திரிந்து கொண்டிருக்கிறார்கள். இங்கிருந்து தான் ஆலைக்கழிவுகள் மற்றும் ஒட்டுமொத்த தில்லியின் சாக்கடைகள் யமுனையில் கலக்கத் துவங்குகின்றன. இந்தக் கலக்கலுக்கு முன்பே விவசாய நோக்கத்திற்காக அரியானா கட்டியுள்ள அணை மூலம் தங்களுக்குத் தேவையான நீரை அந்த மாநிலம் திருப்பிக் கொள்கிறது.

இமயமலையில் உருவாகி கங்கையில் சங்கமமாகும் யமுனையின் மொத்த நீளம் 1,370 கிலோ மீட்டராகும். இதில் வெறும் 22 கி.மீ. தூரம் தான் புதுதில்லியில் உள்ளது. ஆனால் யமுனை நதியை மாசுபடுத்துதலில் 80 விழுக்காடு பணிகள், இந்த 22 கி.மீ. தூரத்தில்தான் நடைபெறுகின்றன. தலைநகரின் பல பகுதிகளிலுமிருந்து 18 பெரிய சாக்கடைக் கால்வாய்கள் யமுனை நதியில் வந்து சேருகின்றன. யமுனையில் உள்ள ஆக்சிஜனில் பெரும்பகுதியை இந்தக் கழிவுகள் காலி செய்து விடுகின்றன. இந்த தண்ணீரால் விலங்குகளைக் கூட கழுவி விடக்கூடாது என்று தில்லி நிர்வாகம் சொல்லும் அளவுக்கு நதியின் நச்சுத்தன்மை அதிகரித்துள்ளது. மேலும் ஒன்பது விழுக்காடு மாசு என்பது தில்லியைத் தாண்டியவுடன் ஆக்ராவில் நடக்கிறது. இந்த யமுனைக் கரையில்தான் உலகப் புகழ்பெற்ற தாஜ் மகால் அமைக்கப்பட்டுள்ளது. யமுனையின் தாக்கம் அதோடு நின்று விடுவதில்லை. மற்றொரு புனித நதி என்று அழைக்கப்படும் கங்கையில் கலந்து அதை மேலும் மாசுபடுத்தி விடுகிறது. தில்லியின் குடிநீர்த் தேவையை யமுனைதான் பூர்த்தி செய்து வருகிறது. ஆனால் தேவைப்படும் நீரை தலைநகருக்குள் நுழைவதற்கு முன்பே எடுத்துக் கொள்கிறார்கள். தலைநகருக்குள் இருக்கும் பல்வேறு சுத்திகரிப்பு நிலையங்களும் சரியாக வேலை செய்யவில்லை. இது மாசுபடுதலை அதிகரித்துவிடும் என்பதுதான் சுற்றுச்சூழல் வல்லுநர்களின் கருத்தாகும்.

தலைநகரில் வீடில்லாமல் தவிப்பவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அண்மையில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. குளிர் தாங்காமல் வீடில்லாத ஏழை மக்கள் உயிரிழக்கிறார்கள் என்பதால்தான் அந்த உத்தரவு இடப்பட்டது. அவர்களில் பெரும்பாலானவர்கள் இந்த யமுனை நதிக்கரையில் தான் தங்குகிறார்கள். மாசுபடிந்து கிடக்கும் யமுனைதான் அவர்களுக்கு குளியலறை மற்றும் குடிநீர்த்தொட்டி. அவர்களைப் பொறுத்தவரை தண்ணீரே இல்லாமல் இருப்பதைவிட றிப்போயிருக்கும் தண்ணீரே பரவாயில்லை என்பது தான் நிலை. தில்லியைத் தாண்டிய பிறகு யமுனை பாய்ந்து ஓடும் அனைத்து மாநிலங்களுக்கும் இது பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. நதியைச் சுத்தம் செய்ய ஒதுக்கப்பட்ட பணம் எல்லாம் எங்கு சென்றது என்பதே தெரியவில்லை. நம் முன் அதிகமாக மாசுபட்டு நிற்கும் யமுனையே அதற்கு சாட்சி என்கிறார் விமலேந்து ஜா.

Source : தீக்கதீர்/கோவை/17-03-2010 புகைபடம் : வலைதளம்.

Monday, March 15, 2010

தண்ணீரின் தூய்மைக்காக 17,000 கி.மீ நடந்த 63 வயது பெண்மணி.

கனடாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலுள்ள உள்ள மிகப்பெரிய ஏரி “தி கிரேட் லேக்ஸ்”. ஐந்து பெரிய ஏரிகளையும் மேலும் சிறு சிறு ஏரிகளையும் உள்ளடக்கியது.
நடுவில் இருப்பவர் திருமதி.ஜோசபின் மண்டாமின்.
இந்த ஏரிகளைச் சுற்றி பூர்வ குடிகள் ஆண்டாண்டு காலமாக வசித்து வருகிறார்கள். இவர்களின் வாழ்கை மற்றும் உணவு இந்த ஏரிகளை சார்ந்தே இருந்தது. மீன்கள் பூர்வ குடிகளின் பிரதான உணவு. வழக்கமான மேற்கத்திய பொருளாதார போக்கு இந்த ஏரிகளையும் மாசடைய வைத்து பூர்வ குடிகளின் நடைமுறை வாழ்கையை பாதித்தது. சுமார் 35 மில்லியன் மக்களின் குடிநீராதாரம் இந்த ஏரிகளே. 63 வயதை எட்டியிருந்த திருமதி.ஜோசபின் மண்டாமின். (Josephine Mandamin ) கனடாவின் பூர்வ குடி மக்களில் ஒருவர். தண்ணீரோடு பேசுபவர். அது மாசுபடுவதை பொறுக்காமல் இந்த முதுமை பருவத்திலும் 2003 ஏப்ரல் முதல் ஓவ்வொரு வருடமும் வசந்த காலத்தில் காலை 5 மணிக்கு முன்னரே எழுந்து பக்தியுடன் 8 லிட்டர் அளவுள்ள தாமிர வாளியில் நீரை சுமந்து நடைபயணத்தை ஆரம்பித்து வழியெங்கும் தண்ணீர் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி அந்த ஏரிகளின் தூய்மைக்கு பாடுபடுகிறார். அவர் 2007 ஆண்டு வரை 5 ஏரிகளையும் சுற்றி வந்து விட்டர்ர். நடந்த தூரம் சுமார் 17,000 கி.மீ. சென்ற வருடம் செயின்ட. லாரன்ஸ் நதிக்கரையில் நடந்துள்ளார். ஆரம்பத்தில் பரிகாசம் செய்யப்பட்ட நடை பயணம் இன்று ஒரு சாதனைப் பயணமாக மாறி ஊடகங்கள் பின் தொடருமளவிற்கு வளர்ச்சியடைந்துள்ளது. சாதாரண, வயது முதிர்ந்த பூர்வகுடி பெண் திருமதி.ஜோசபின் மண்டாமின் மிகப் பெரிய சாதனையாளர் மட்டுமல்ல வணக்கதிற்கும், போற்றுதலுக்கும் உரியவர். அவர் மேலும் பல செயற்கரிய செயல்கள் செய்ய இவ்வலைப் பூ வாழ்த்துகிறது.
நடைப்பயணம் பற்றி மேலும் அறிந்துகொள்ள
www.motherearthwaterwalk.com
தொடர்பை பயன்படுத்துங்கள்

Saturday, March 13, 2010

40 வினாடிகளில் நீர் சிக்கனம் பற்றி, தவிர்க்கக்கூடாத படம்.



40 வினாடிகளில் இவ்வளவு அற்புதமாக நீர் சிக்கனம் பற்றி படம் எடுக்க முடியாது என்று நினைக்கிறேன். மொழி இதற்கு தடையல்ல சிறு குழந்தை கூட புரிந்து கொள்ளலாம். WWF க்கு வாழ்த்துக்கள். இப்பதிவுக்கு காரணமாய் இருந்தவர்கள் திரு .C.சுதர்சனம்- திருப்பூர், Er. சுபா ஆகியோர். தமக்கு கிடைத்த சில மணித்துளிகளில் என்னை தொடர்பு கொண்டு இப்படத்தினை அனுப்பி வைத்தார்கள். எனவே பாராட்டுக்குரியவர்கள் திரு .C.சுதர்சனம், Er. சுபா அவர்களே. அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்ளுகிறேன். உங்கள் வலைப்பூக்களில் இதனை பதிவிட முயற்சி செய்யுங்கள் நிறைய மக்களை சென்றடையும்.

Wednesday, March 10, 2010

உலக தண்ணீர் தினம் பற்றி வலைப்பதிவர்களுக்கு ஓர் வேண்டுகோள்.

ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் 22 தேதியன்று உலக தண்ணீர் தினமாக உலகெங்கும் கடைபிடிக்கப்படுகிறது. இந்த வருடம் சுத்தமான நீரின் அவசியம் பற்றி மக்களிடையே “சுத்தமான நீரினால் ஆரோக்கியமான ஒரு உலகம்” என்று தலைப்பிட்டு விழிப்புணர்வை தரவுள்ளனர். அதிவேக பொருளாதாரத்தினால் நகரங்களில் ஏற்படும் மாசு மற்றும் நீராதாரங்களே காணாமல் போய்விடுதல், கிராமங்களில் இரசாயான உரம், பூச்சி கொல்லி மற்றும் களைகொல்லிகளால் நீராதாரங்களில் மாசுபாடு போன்ற காரணிகளால் நீராதாரங்கள் இயற்கையாய் புதுபித்துக்க கொள்ளும் அல்லது சுத்தமாகும் தன்மையை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறது. இதனால் நீர்வாழ் உயிரினங்களும், பறவையினங்களும் மிகுந்த பாதிப்பை அடைந்துள்ளன. அதனைப்பற்றி மக்களும் அதிகம் கவலைப்படுவதில்லை. வலைப்பதிவர்களாகிய நாம் நிறைய கட்டுரைகள், புகைபடங்கள், அனுபவங்களை அவரவர் வலைப்பூக்களில் பதிவுகள் இட்டால் இந்த விழிப்புணர்வை எளிதாக மக்களிடம் சென்று சேர்க்க இயலும் என்று எண்ணுகிறேன். முடிந்தால் பின்னூட்டத்தின் மூலம் தெரியப்படுத்தினால் எல்லாவற்றையும் நானும் படிப்பேன். இப்போதிருந்தே மேலேயுள்ள படத்தை நமது வலைப் பூக்களில் இட்டு நிறைய மக்களிடம் சென்று சேர்க்கலாம்.

Monday, March 8, 2010

பருத்தி இளம்சிவப்பு காய்புழுவிற்கு (Pink bollworm) எதிராக Bt பருத்தி குஜராத்தின் சில பகுதிகளில் செயல்படவில்லை - மான்சாண்டோ ஒப்புதல்

உலகிலேயே முதல் முறையாக குஜராத்தின் சில மாவட்டங்களில் பருத்தி இளம்சிவப்பு காய்புழுவிற்கு (Pink bollworm) எதிராக Bt பருத்தி செயல்படவில்லயென்றும் பூச்சிகள் எதிர்ப்பு சக்தியை பெற்றுவருகின்றன என்றும் மான்சாண்டோ ஒப்புக் கொண்டுள்ளது. இதற்கு மாற்றாக அவர்களது போல்கார்டு II பயன்படுத்தும்படி ஆலோசனையும் கூறியுள்ளனர். “இந்து” நாளிதழில் செய்தி வெளியிட்டிருந்தார்கள். படித்தவுடன் எனக்கு ஆச்சரியமாக இருந்தது காரணம் உலகின் விதை சாம்ராஜியத்தின் முடிசூடா மன்னர்கள் ஒரு சாதாரண கனடா நாட்டு விவசாயி ஒருவரை செய்யாத குற்றதிற்கு 1998 ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து $400,000 நஷ்ட ஈடு தரவேண்டுமென கோரியவர்கள் இயற்கைக்கு தலை வணங்குகிறார்கள் என்பதால் தான். தீர்ப்பு மான்சாண்டோவுக்கு என்றாலும் விவசாயி நஷ்ட ஈடு தரவேண்டியதில்லை என வழக்கு முடிந்தது. உலகபுகழ் பெற்ற இந்த வழக்கை விபரமாக படிக்க கீழ்கண்ட தொடர்பு உதவும். http://www.percyschmeiser.com/conflict.htm

உலகின் முதன்மையான நிறுவனமே ஒரு கால கட்டதில் Bt யின் செயல்திறன் பற்றி ஓப்புக்கொள்ளும் போது உணவுப் பயிர்களில் மரபணுமாற்றம் தேவையா ???

அறிவினாலும், ஆராய்ச்சியினாலும் இயற்கையைவிடச் சிறந்த ஒன்றை உருவாக்க முடியும், என்று மனித இனம் நம்புவது கேலிக்குரிய மாயை.
திரு.மாசானபு புகோகா.

Thursday, March 4, 2010

இன்றைய கிராம நீராதாரம்.

பஞ்ச பூதங்களில் ஒன்றான “நீர்” எவ்வளவு இன்றியமையாதது என்பதனை நாம் நடைமுறை வாழ்கையில் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இயற்கை தந்த இந்த அரிய பொக்கிஷத்தை எவ்வாறு பாதுகாத்து காப்பாற்றுகிறோம் என்று பார்த்தால் மனம் தான் வேதனையடைகிறது.

நண்பர் ஒருவருடன் அண்மையில் அவரது கிராமத்திற்குச் சென்றிருந்தேன். ஊரின் எல்லையில் அமைந்திருந்த அந்த குளத்தைப் பார்த்தவுடன் நண்பர் சிறு வயதில் நாங்கள் தெளிந்த நீர் நிறைந்த இக்குளத்lதில் குளித்து விளையாடி மகிழ்ந்த இடம் இன்று கேட்பாரற்று குப்பைமேடாகிவிட்டது என்று கவலையுடன் கூறினார். உண்மையில் குளத்தைச் சுற்றி குப்பை கூளங்கள் அதன் காரணமாக மாசுபட்டுப் போன குளத்து நீர். நிச்சயம் நிலத்தடி நீரும் மாசுபட்டிருக்கும். அருகிலுள்ள விவசாய நிலங்களுக்கு இந்த மாசுபட்ட நீர்தான் நீராதாரமாக இருந்தால் பயிரின் தரம் எப்படியிருக்கும்?

விஞ்ஞான முன்னேற்றம் குழாயில் குடிநீரை தருகிறது. வரவேற்க வேண்டிய ஒரு முன்னேற்றம். அதற்காக இதுபோன்ற வாழ்வாதாரங்களை நாம் கெடுக்க வேண்டுமா? இன்று கிட்டதட்ட எல்லா கிராமங்களிலும் பழைய நீராதாரங்களான ஆறுகள், ஏரி, குளம், குட்டை, கிணறுகள் என எல்லாம் கவனிப்பாரற்றுத்தான் உள்ளன. ஒரு நாள் குழாயில் நீர் வரவில்லை என்றால் இந்த நீராதாரங்களை நாம் திரும்ப உபயோகிக்குமளவிற்கு நாம் இவைகளை பராமரித்தால் வருங்காலம் ஒளிமயம் இல்லையேல் குறைந்து வரும் மழையளவு, புவிவெப்பத்தால் நீரின் தேவை, பெருகிவரும் மக்கள் தொகை, அதிவேக பொருளாதார வளர்ச்சி போன்ற காரணங்களால் நாம் பாதிக்கப்பட போகிறாம் என்பதில் ஐயமில்லை.

இதுபோன்ற நீராதாரங்களை நோக்கி ஆண்டாண்டு காலமாக பறந்த வந்து இனப்பெருக்கம் செய்து வந்த வெளிநாட்டுப் பறவையினங்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும், ரஷ்ய நாட்டு பறவையினங்கள் சில வருடங்களாக வருவதில்லை எனவும் பறவை வல்லுனர்கள் கூறுகிறார்கள். காரணம் அசுத்தமான நீர்நிலைகள், சுத்தம் செய்ய இயற்கை தந்த மீன்கள் இல்லாமை என்று காரணம் கூறலாம். ஆனால் ஒரு கிராமத்தின் தன்னிறைவிற்கும், இந்நீராதாரங்களை காப்பாற்றி அடுத்த தலைமுறைகளுக்கு தருவதற்கும் பணம் மாத்திரம் போதாது மனமும் வேண்டும்.

Wednesday, March 3, 2010

வேருக்காக வெட்டிவேர் வளர்ப்பு - ஓர் பார்வை

வேருக்காக வெட்டிவேர் வளர்ப்பு ‘சோதனை’ நன்றாகவே நடந்துள்ளது. பைகளில் வளர்த்து சுமார் 9 மாதத்தில் முடிவுக்கு கொண்டு வந்ததில் பொருளாதார ரீதியில் யார் வேண்டுமானாலும் ஆரம்பிக்கலாம் என்று தோன்றுகிறது. 1 அடி நீள வேர்களும், சுமார் 1 கிலோ எடையளவும் ( உலர வைக்காமல் ) இருந்தது. இன்னும் 3 அல்லது 5 மாதங்கள் விட்டிருந்தால் இன்னும் எடை கூடியிருக்கும் என்று தோன்றுகிறது. சில படங்கள் உங்கள் பார்வைக்காக. ‘வேருக்காக வெட்டிவேர் வளர்ப்பு’ பற்றிய பழைய பதிவினைக் காண :-
http://maravalam.blogspot.com/2009/11/blog-post_28.html