Wednesday, March 10, 2010

உலக தண்ணீர் தினம் பற்றி வலைப்பதிவர்களுக்கு ஓர் வேண்டுகோள்.

ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் 22 தேதியன்று உலக தண்ணீர் தினமாக உலகெங்கும் கடைபிடிக்கப்படுகிறது. இந்த வருடம் சுத்தமான நீரின் அவசியம் பற்றி மக்களிடையே “சுத்தமான நீரினால் ஆரோக்கியமான ஒரு உலகம்” என்று தலைப்பிட்டு விழிப்புணர்வை தரவுள்ளனர். அதிவேக பொருளாதாரத்தினால் நகரங்களில் ஏற்படும் மாசு மற்றும் நீராதாரங்களே காணாமல் போய்விடுதல், கிராமங்களில் இரசாயான உரம், பூச்சி கொல்லி மற்றும் களைகொல்லிகளால் நீராதாரங்களில் மாசுபாடு போன்ற காரணிகளால் நீராதாரங்கள் இயற்கையாய் புதுபித்துக்க கொள்ளும் அல்லது சுத்தமாகும் தன்மையை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறது. இதனால் நீர்வாழ் உயிரினங்களும், பறவையினங்களும் மிகுந்த பாதிப்பை அடைந்துள்ளன. அதனைப்பற்றி மக்களும் அதிகம் கவலைப்படுவதில்லை. வலைப்பதிவர்களாகிய நாம் நிறைய கட்டுரைகள், புகைபடங்கள், அனுபவங்களை அவரவர் வலைப்பூக்களில் பதிவுகள் இட்டால் இந்த விழிப்புணர்வை எளிதாக மக்களிடம் சென்று சேர்க்க இயலும் என்று எண்ணுகிறேன். முடிந்தால் பின்னூட்டத்தின் மூலம் தெரியப்படுத்தினால் எல்லாவற்றையும் நானும் படிப்பேன். இப்போதிருந்தே மேலேயுள்ள படத்தை நமது வலைப் பூக்களில் இட்டு நிறைய மக்களிடம் சென்று சேர்க்கலாம்.

44 comments:

  1. எனக்கு தெரிந்த என்னைவிட அதிகம் படித்தவர்...சமையல் அறையில் இருக்கும் குழாயை Boreset Pump யில் இருந்து வரும் அளவுக்கு திறக்கிறார்,என்னத்தை சொல்லுவது?
    இவரெல்லாம் தானாக திருந்தினால் தான் உண்டு. :-(

    ReplyDelete
  2. அவசிய பதிவு

    virtual water பற்றியும் எழுதுங்கள்

    விஜய்

    ReplyDelete
  3. வீட்டில் நடக்கும் கட்டிடவேலைகளால் பிசியாக இருக்கிறேன். இருந்தாலும் பதிவிட முயல்வேன் .

    ReplyDelete
  4. நிச்சயம் அனைவரும் நாம் இழந்து கொண்டிருக்கும் நீர்வளத்தைப் பற்றிய அறிவு கொண்டிருக்க வேண்டும்!. நல்ல பதிவு.

    ReplyDelete
  5. பயனுள்ள பதிவு.

    ReplyDelete
  6. திரு.வடுவூர் குமார், திரு.விஜய், திருமதி.முத்துலெட்சுமி, திரு.Jeeves, திரு.ஈரோடு கதிர், திரு.மஞ்சூர் ராசா,

    உங்களின் வருகைக்கு மிக்க நன்றி. நிறைய கட்டுரைகள், புகைபடங்கள், அனுபவங்களை அவரவர் வலைப்பூக்களில் பதிவுகள் இட்டால் இந்த விழிப்புணர்வை எளிதாக மக்களிடம் சென்று சேர்க்க இயலும் என்று எண்ணுகிறேன்.

    ReplyDelete
  7. http://sirumuyarchi.blogspot.com/2010/03/blog-post.html

    இது நீர் நாளுக்கான என்னுடைய பதிவு ..

    ReplyDelete
  8. திருமதி.முத்துலெட்சுமி,

    உங்கள் பதிவிற்கு நன்றி.

    ReplyDelete
  9. பகிர்வுக்கு நன்றி
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. என் பங்காக:

    உலகம் உய்ய..-தண்ணீர் தினத்துக்காக http://tamilamudam.blogspot.com/2010/03/blog-post_13.html

    ReplyDelete
  11. திரு.நண்டு (இயற்பெயர் தெரிந்தால் நன்றாக இருக்கும்.)

    உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  12. திருமதி. ராமலக்ஷ்மி

    உங்கள் பதிவிற்கு நன்றி.

    ReplyDelete
  13. என்னய்யா? இப்படி சொல்றீங்க?
    இது நமக்கு அத்தியாசமான ஒன்று.
    அவசியம் நாம் அனைவரும்
    இதன் விழிப்புணர்வை
    மக்களுக்கு எடுத்து சொல்ல வேண்டும்.
    'உண்ணுங்கள் பருகுங்கள்
    வீண் விரயம் செய்யாதீர்கள்'

    ReplyDelete
  14. திரு.இளந்தென்றல்

    உங்கள் வருகைக்கு மிக்க நன்றி.

    "நீராதாரங்கள் இயற்கையாய் புதுபித்துக்க கொள்ளும் அல்லது சுத்தமாகும் தன்மையை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறது. அதனைப்பற்றி மக்களும் அதிகம் கவலைப்படுவதில்லை". அதற்காகத்தான்.

    "'உண்ணுங்கள் பருகுங்கள்
    வீண் விரயம் செய்யாதீர்கள்'"

    எடுத்துரைக்க வேண்டிய நல்ல செய்தி.

    ReplyDelete
  15. மிகவும் சீரிய சிந்தனை! ஒட்டுமொத்த உலகத்தின் எதிர்காலம் நீர்வளத்தையே நம்பியிருக்கிறது. உங்கள் முயற்சிக்கு ஒத்த கருத்துடைய அனைவரும் பேராதரவு அளித்து வெற்றியடையச் செய்வார்கள் என்பது திண்ணம். பாராட்டுக்களும் நன்றிகளும்!!

    ReplyDelete
  16. திரு.சேட்டைக்காரன்

    உங்கள் வருகைக்கு மிக்க நன்றி. உங்கள் எண்ணம் போல் அனைவரும் பேராதரவு அளித்து வெற்றியடையச் செய்யட்டும். இது வாழ்வாதாரம் சம்பந்தப்பட்டது எனவே வெற்றி பெரும். உங்கள் பாராட்டுகளுக்கு நன்றி.

    ReplyDelete
  17. மிக நல்ல முயற்சி. நிச்சயம் இது குறித்து வலைப்பதிகிறேன். நன்றி

    ReplyDelete
  18. திரு.அதிஷா

    உங்கள் வருகைக்கு நன்றி. பதிவேற்றி விட்டு பின்னூட்டத்தில் தெரிவித்தால் 22-03-10 அன்று அனைத்து பதிவுகளையும் தொகுத்து தர எளிமையாக இருக்கும். வாழ்த்துகள்

    ReplyDelete
  19. உலக தண்ணீர் தினம் கொண்டாடப்படுவது புது செய்தி (அல்லது கவனிக்கப்படாதிருக்கலாம்).

    //மக்களும் அதிகம் கவலைப்படுவதில்லை//

    எல்லாருமே அப்படியில்லை; சில விஷயங்கள் வருத்தமாக இருந்தாலும், என்ன செய்வதென்று சரியான தெளிவு/ வழிகாட்டுதல் இல்லை என்பதும் காரணம் எனலாம்.

    ReplyDelete
  20. திருமதி.ஹுஸைனம்மா

    உங்கள் வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  21. அய்யா, உலக தண்ணீர் தினத்திற்காக தங்களின் இந்த முயற்சியை பாராட்டுகிறேன். என்னால் ஆனா ஒரு சிறு பதிவு இங்கே
    http://mukundamma.blogspot.com/2010/03/blog-post_13.html

    நன்றி அய்யா

    ReplyDelete
  22. என் பதிவு

    http://mathysblog.blogspot.com/2010/03/blog-post_14.html
    தண்ணீர் சிக்கனம் வேண்டும் இக்கணம் .

    ReplyDelete
  23. இந்த இடுகை இட்ட அன்றே எனக்கு கமென்ட் இட ஆசைதான் ஆனால் பதிவுடன் கமென்ட் இடலாம் என காத்திருந்தேன். இருப்பினும் சில பிரச்சாரயுத்திகளை கூறலாம் என இந்த கமென்ட்
    கூகிள் தேடும் விதத்தில் தேடினால் அந்த சிறப்புயிடுகைகளை பெறலாம் அதன் தொகுப்பு இங்கே
    http://www.google.com/reader/shared/neechalkaran
    அடுத்தடுத்த இடுகைகள் தானாக குறிப்பிட்ட மணிநேரத்தில் கூகிளால பகிரப்படும்

    யாரேனும் இதற்கு இணைப்பு கொடுக்க விரும்பினால் பகிர்வு நிரலியை பயன்படுத்தி இணைப்புகொடுக்கலாம் உதாரணமாக இப்படி
    http://ethirneechal.blogspot.com/

    ReplyDelete
  24. திருமதி.முகுந்த் அம்மா
    திருமதி. கோமதி அரசு

    உங்கள் இருவரின் பதிவிற்கும் மிக்க நன்றி.இதுபோன்று அனைவரும் பங்கேற்றால் நிச்சயம் நாம் மாசுபாட்டை அகற்றி தூய்மையான நீரைப் பெறமுடியும். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  25. திரு. நீச்சல்காரன்
    உங்கள் வருகைக்கு நன்றி. தாமதமாக வந்தாலும் புதிய யுக்தியை அளித்து உலக தண்ணீர் தினத்தை பிரபலபடுத்தியதற்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  26. மிகவும் பயனுள்ளபதிவு. அவசியமானதும் கூட பாராட்டுக்கள்.

    ReplyDelete
  27. "நீரின்றி அமையாது உலகு.." ஆதிமூலக் கிருஷ்ணனின் கடந்தவருட தண்ணீர் தினப் பதிவு. இதையும் நீங்கள் தொகுக்கவிருக்கும் சுட்டிகளோடு இணைத்திட வேண்டுகிறேன். நன்றி!

    ReplyDelete
  28. திருமதி.மாதேவி

    உங்கள் வருகைக்கு மிக்க நன்றி.

    திருமதி.ராமலக்ஷ்மி

    உங்கள் ஆர்வம் பாராட்டுக்குரியது. கண்டிப்பாக "நீரின்றி அமையாது உலகு.." ஆதிமூலக் கிருஷ்ணனின் கடந்தவருட தண்ணீர் தினப் பதிவு தொகுக்கவிருக்கும் சுட்டிகளோடு சேர்க்கப்படும்.நன்றி.

    ReplyDelete
  29. நன்று. நன்றி. வாழ்த்துகள்.

    ReplyDelete
  30. அனைவரும் சிந்திக்கவேண்டிய ஒன்றுதான் .

    மிகவும் பயனுள்ள பதிவு பகிர்வுக்கு நன்றி !


    மீண்டும் வருவான் பனித்துளி

    ReplyDelete
  31. திரு.ஆதிமூலகிருஷ்ணன்

    உங்கள் பதிவு மிக நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள். வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  32. திரு.பனித்துளி சங்கர்

    உங்கள் வருகைக்கு மிக்க நன்றி. வாருங்கள் நாம் அனைவரும் சேர்ந்து நம்மால் முடிந்ததை வரும் தலைமுறைக்கு செய்வோம்.

    ReplyDelete
  33. உலக தண்ணீர் தினத்துக்கான பதிவொன்றை இட்டுள்ளேன் முடிந்தால் பாருங்கள். http://ramyeam.blogspot.com/2010/03/blog-post.html

    ReplyDelete
  34. திருமதி. மாதேவி

    உங்கள் பதிவிற்கு நன்றி.எல்லா பதிவுகளையும் படித்துவிடுவேன்.

    ReplyDelete
  35. வின்சென்ட் அவர்களே! என்னால் முடிந்தவரையில் நானும் ஒரு பதிவை போட்டிருக்கிறேன். ஒரு அணில் போல....!

    http://settaikkaran.blogspot.com/2010/03/blog-post_17.html

    ReplyDelete
  36. திரு.பனித்துளி சங்கர்

    உங்கள் வருகைக்கு மிக்க நன்றி. மாலையில் உங்கள் மெயில் பார்த்தவுடன் ஒரு பதிவை போட்டிருக்கிறேன். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  37. திரு.சேட்டைக்காரன்

    உங்கள் பதிவிற்கு நன்றி.

    ReplyDelete
  38. http://amaithicchaaral.blogspot.com/2010/03/blog-post_10.html

    என்னுடைய பங்காக ஒரு சிறுதுளி.

    ReplyDelete
  39. எனது வலையிலும் பதிந்து விட்டேன்..

    http://ippadikkuelango.blogspot.com/2010/03/blog-post_17.html

    ReplyDelete
  40. திருமதி. அமைதிசாரல்

    உங்கள் பதிவிற்கு மிக்க நன்றி. ஆனால் அது கீழ் கண்ட தொடர்பில் இருக்க வேண்டும். நன்றியுடன்.

    http://amaithicchaaral.blogspot.com/2010/03/blog-post_17.html

    ReplyDelete
  41. திரு இளங்கோ

    உங்கள் பதிவிற்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  42. திருமதி.ஹுஸைனம்மா


    உங்கள் பதிவிற்கு நன்றி.

    ReplyDelete