Tuesday, February 10, 2009

மானாவாரியில் நெல் சாகுபடி ??????

படிப்பதற்கு ஏதோ கற்பனை போன்று தோன்றும். ஆனால் கோவையின் அருகிலுள்ள “அட்டப்பாடி” மலைப் பகுதிகளில் “புழுதி நெல்” சாகுபடி என்று இதனை அழைக்கின்றனர். காலம் காலமாக அங்கு வசிக்கும் மக்கள் பாரம்பரியமாக இதனை ஏப்ரல் மாதம் இங்கு பெய்யும் கோடை மழையிலோ அல்லது ஜுன் மாதம் தொடங்கும் தென்மேற்கு பருவ மழையிலோ விதைகளை தூவி பின் உழுகின்றனர். மழை ஈரத்திலே அவை முளைத்துவிடுகின்றன. பின் 3 அல்லது 4 முறை களை எடுகின்றனர் அவ்வளவே. நெல்மணிகள் 6 மாதங்களில் அறுவடைக்குத் தயார். வழக்கமாக நாம் காணும் வரப்பு, நாற்றங்கால், சேற்று உழவு, நாற்று நடுதல், அதிகம் நீர் பாய்ச்சி நிறுத்துதல், நோய், மருந்தடித்தல் போன்றவைகள் இல்லை. இந்த புது அரிசியில் தான் பொங்கலிடுவது வழக்கம்.
2009 ஜனவரி மாதம் நெல் அறுவடை செய்த தனது நிலத்தில் நிற்கும் விவசாயி திரு.வெள்ளிக்குட்டி பாத்திகள் அல்லது வரப்பு போன்ற அமைப்புகள், நீர் வாய்கால்கள் இல்லை என்பதை கவனிக்கவும். நெற்கட்டைகள் இருப்பதையும் காணலாம்.திரு.வெள்ளிக்குட்டி தனது குழந்தையுடன் வைகோல் போருக்கு முன்.இதில் வருத்தப்பட வேண்டிய விஷயமும் உண்டு. இந்த புழுதி நெல் சாகுபடி நாளுக்கு நாள் மிக மிக குறைந்து வருகின்றது. அதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு. வருடதிற்கு வருடம் குறைந்து வரும் மழையளவு, நிறைய நிலங்கள் தரிசாக இருப்பதால் பயிர் செய்யப்படும் இடத்தில் நிறைய மிருகங்கள், பறவைகளின் தொல்லை, மக்களின் மனோபாவம், இன்றைய பொதுவான விவசாய பிரச்சனைகள் என கூறிக்கொண்டே இருக்கலாம்.
நெல்மணிகள்
ஆனால் மிக எளிய பாரம்பரியம் மிக்க ஒரு விவசாய முறையும், நீர் தேவை குறைந்த ஓரு நெல் இரகமும் அழிந்து கொண்டுவருகிறது என்பதே உண்மை.

13 comments:

  1. Very Good and Useful information. While giving such information please add details about the contact person who can give specific information.

    Thanks and Regards
    S.Barani Kannan.

    ReplyDelete
  2. திரு.பரணி கண்ணன்
    உங்கள் வருகைக்கு நன்றி. அங்குள்ள விவசாய்கள்தான் விபரங்கள் தர இயலும். நீங்கள் அதிகம் பழகினால் தான் உங்களிடம் பேசுவார்கள்.அந்த விவசாயி எனது அண்டை நிலத்துக்காரர்.

    ReplyDelete
  3. vincent sir, ithu etho athisayam anaal unmai madhiri irukku

    ReplyDelete
  4. திரு வின்சென்ட் அவர்களுக்கு. நல்ல அறிமையான் தகவல் இது போன்று. அந்தியூர் மலையில் மடம், தேவர் மலை போன்ற இடங்களிலும் இது போல் நெல் சாகுபடி செய்கிறார்கள். நீங்கள் கூறுவது கேரளா நான் கூறுவது தமிழ்நாடுஉ. நெல் கதிருடன் படம் எடுத்திரரு்தால் நன்றா இருந்திருக்கும். நன்றி.

    ReplyDelete
  5. திருமதி.சீதா, திரு.குப்புசாமி

    உங்கள் இருவரின் வருகைக்கும் நன்றி.இது உண்மைதான். நானே நேரில் பார்த்தது.முன்பு எடுத்த படங்களை சிடியில் பதிவு செய்து வைத்தேன். பதிவிடும் போது கிடைக்கவில்லை. நானே 10 சென்ட் அளவிற்கு போடலாமென்று இருக்கிறேன். நிச்சயம் எனது அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்வேன்.

    "அந்தியூர் மலையில் மடம், தேவர் மலை போன்ற இடங்களிலும் இது போல் நெல் சாகுபடி செய்கிறார்கள்."

    உபயோகமான தகவல் தந்தமைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  6. எந்த வெரைட்டியை அவர்கள் பயிரிடுகிறார்கள்?

    ReplyDelete
  7. திரு.சதுக்க பூதம்

    உங்கள் வருகைக்கு மிக்க நன்றி. கணனி சரியாக இயங்காததால் உடனே பதில் தர இயலவில்லை. எனக்கும் எந்த வெரைட்டி என்று தெரியவில்லை. அவர்களிடம் விசாரித்ததில் பாரம்பரியமாக இதனை பயிர் செய்கிறோம் என்று மட்டும் கூறுகிறார்கள்.தீர விசாரித்து பதில் தருகிறேன்.

    ReplyDelete
  8. சென்னையை சேர்ந்த ஒரு அரசு சாரா நிறுவனம் தமிழ்நாட்டில் உள்ள பழங்காலத்து விதை வகைகள் அனைத்தையும் சேமித்து வைத்துள்ளதாக கேள்வி பட்டேன். இது போன்ற மானாவாரி நெல் விவசாயம்,நேரடி நெல் விதைப்பு மற்றும் குறைந்த நீரில் நெல் விவசாயம் செய்ய வேண்டியவர்களுக்காக அவர்களிடமிருந்து நெல் பெற்று விரிவான அராய்ச்சி செய்வது இன்றைய உடனடி தேவை.மேலும் இயற்கை வேளாண்மை செய்யவும், வேதி உரங்களை எதிர்பார்க்காத இது போன்ற நெல் வகைகளை உபயோக படுத்தலாம்.

    ReplyDelete
  9. திரு.சதுக்க பூதம்

    உங்கள் வருகைக்கு மீண்டும் நன்றி.

    "சென்னையை சேர்ந்த ஒரு அரசு சாரா நிறுவனம் தமிழ்நாட்டில் உள்ள பழங்காலத்து விதை வகைகள் அனைத்தையும் சேமித்து வைத்துள்ளதாக கேள்வி பட்டேன்."

    நானும் கேள்விப்பட்டிருகிறேன்.இந்த முறை நானே கொஞ்சம் பயிர் செய்யலாமென்று இருக்கிறேன்.

    ReplyDelete
  10. useful information. Thanks for sharing such rare information abour our ancient way of farming.

    With regards
    Ramkumar.S

    ReplyDelete
  11. Sri. Ramkumar

    Thank you very much for visiting my blog and for the comments.

    ReplyDelete
  12. Very useful information.
    I want some seeds of this variety.
    I anted to cultivate in my land.
    Thanks and Regards
    Mee.Rajendran

    ReplyDelete
  13. திரு. இராஜந்திரன்

    உங்கள் வருகைக்கு நன்றி. மீண்டும் தொடர்பு கொள்ளுங்கள் விதை நெல் தருகிறேன்.

    ReplyDelete