Tuesday, October 14, 2008

முதல் உலக கைகழுவும் தினம் 15 அக்டோபர் 2008.


இத்தினம் உங்களுக்கு வியப்பையும், அதிர்ச்சியும் தரலாம். இதற்கெல்லாம் கூட ஒரு உலக தினமா ?? என்று, ஆனால் WHO உலகில் ஆண்டிற்கு சுமார் 35 லட்சம் குழந்தைகள் தங்கள் 5 வது பிறந்த நாளை கொண்டாட உயிருடன் இருப்பதில்லை என்ற அதிர்ச்சித் தகவலை தருகிறது. காரணம் வயிற்றுப்போக்கு மற்றும் நிமோனியா போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டு இறந்துவிடுகின்றனர். காரணம் நன்றாக கைகளை சுத்தம் செய்யாமல் உண்பது மற்றும் மலம் கழித்த பின் கைகளை நன்கு சுத்தம் செய்யாமல் சென்றுவிடுவது போன்றவைகள். ஆனால் இதனை எளிதான செலவு குறைந்த முறையால் இறப்பு விகிதத்தை பாதியாக குறைக்க இயலும் என்று ஐக்கிய நாடுகள் சபை (UN) கணக்கிட்டுள்ளது. அந்த முறை சோப்பை உபயோகித்து கை கழுவுதல் ஆகும். சுமார் 20 நாடுகளில் இதனை பள்ளிக் குழந்தைகளுடன் கொண்டாடுகின்றனர்.

சில விளம்பரங்களை நாம் மறப்பதில்லை.

ஆரோக்கிய வாழ்வினைக் காப்பது லைப்பாய்
லைப்பாய் இருக்குமிடம் ஆரோக்கியம் இருக்குமிடம் இடம். லைப்பாய்

என்று விளம்பரம் செய்த lifebuoy சோப் இந்தியாவின் சுமார் 44,000 கிராமங்களுக்கு The lifebuoy Swasthya chetna என்ற ஆரோக்கிய விழிப்புணர்வு இயக்கம் மூலம் இந்திய கிராமங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தியது. இது உலகின் மிகப்பெரிய ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வு இயக்கமாகும். நாமும் நேரம் சந்தர்ப்பம் கிடைக்கும் போது தேவைப்படும் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு தருவோம். குறிப்பாக உழவர் பெருமக்கள் இரசாயன மருந்து அடித்த பின் நீரினால் மட்டும் கைகழுவிட்டு உணவருந்த வருவதை பார்த்திருக்கிறேன். சோப்பை பயன்படுத்தி கைகழுவது நல்லது.

5 comments:

  1. லைப் பாய் சோப்க்காரங்க இப்படி எல்லாம் செய்திருக்காங்களா.. பாராட்டனும்..

    ReplyDelete
  2. திருமதி.முத்துலெட்சுமி-கயல்விழி
    திரு.தெகா

    உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.லைப் பாய் தங்களின் சொந்த செலவில் இதனை செய்தது பாராட்டுதலுக்குரியது.

    ReplyDelete
  3. நல்ல தகவல்.
    இந்த விசயத்தை கண்டிப்பா அனைவரும் தெரிஞ்சுக்கணும்.
    அனைத்து பள்ளிகளுக்கும் இத்தனை தெரியப்படுதனும்.
    முடிந்தவரை அனைவரிடமும் இதைப்பற்றி பேசுவோம்!

    ReplyDelete
  4. திரு.ஜுர்கேன் க்ருகேர்

    உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.

    ReplyDelete