Wednesday, April 16, 2008

உலக வெட்டிவேர் வலைஅமைப்பில் The Vetiver network (international)முதல் பக்கத்தில் எனது "ஐடியா" .

இரண்டாண்டுகளுக்கு முன் வெட்டி வேரை பாலிதீன் பைகளில் உண்டாக்கினேன். வாங்குவோர் ஒருவரும் இல்லை. திரும்ப எனது இடத்திலயே நடலாமென முடிவு செய்தால் மேடான பகுதிகளுக்கு எடுத்துச் செல்வது கடினமாக இருந்தது கூடவே குழி எடுக்க பின் நடவு செய்ய என மனித சக்தியும், பணமும் விரயமாவதாய் தோன்றியது. எனவே சென்ற வருடம் இந்த "நெட்பாட்" முறையை கடைபிடித்ததில் மேற்கண்ட பிரச்சனைகள் குறைந்தன. பின் கொச்சி பயிற்சிப் பட்டறையில் குவைத் நாட்டில் வெட்டிவேர் சிம்பு (Slips) கொண்டு வளர்ப்பதை பார்த்தேன். எளிய இம்முறையை அவர்களுக்குத் (TVNI) தெரிவித்தேன் அவர்களும் பிரசுரித்துவிட்டார்கள். http://www.vetiver.org
இம்முறையில் வேர்கள் நன்கு வள்ர்ந்த பின் நடப்படுவதால் நட்ட நாள் முதற்கொண்டே வளர ஆரம்பித்துவிடுகிறது. எளிதாக அட்டைப் பெட்டிகளில் அடைத்து வேறு ஊர்களுக்கு அனுப்பலாம்.(பாலிதீன் பைகளில் இது கடினம்)
உலக வெட்டிவேர் வலைஅமைப்பில் வந்தது மகிழ்ச்சிதான் என்றாலும் வெட்டிவேரின் தாயகம் (நாம்தான்) இதன் சிறப்பை உணர்ந்து இதனை விவசாயத்துக்கு மட்டுமின்றி சாலை, இரயில் பாதை பராமரிப்புக்கும், கழிவு நீர் சுத்திகரிப்பிற்க்கும் பயன்படுத்தினால் மேலும் மகிழ்ச்சியடைவேன்.

14 comments:

  1. வின்ஸெண்ட் ஐயா
    வாழ்த்துகள்.
    சிம்பு முறையின் சிக்கல்கள் என்ன? அது எவ்விதம் Net-pot மூலம் தீர்க்கப் படுகிறது? Net-pot முறையில் வேர்கள் எப்பொழுதும் வெளியே தெரிகின்றனவே. இதனால் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடம் கொண்டு செல்லும் போது அடிபட வாய்ப்புகள் அதிகமா?
    நன்றி

    ReplyDelete
  2. உலக அரங்கில் தங்களின் கருத்துக்கள் பாராட்டப்படுவதும் பேசப்படுவதும் எனக்கு மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்.

    தங்களுக்கு மறுப்பு இல்லையானால், தங்களை எப்படி தொடர்பு கொள்வது என்று அறிய ஆசாயாய் இருக்கிறது. என் இல்லத்தில் (அடுக்குகட்டிடம், மொட்டை மாடி, சுற்றுப்புற தோட்டம்) வெட்டிவேர் பயிர் செய்வது எப்படி என்று அறிய ஆசை. நீங்கள் vaithikasri AT gmail DOT com என்று தொடர்பு கொண்டாலும் எனக்கு மகிழ்ச்சி.

    நன்றி

    ஜயராமன்

    ReplyDelete
  3. திரு.கபீரன்பன்
    உங்கள் வருகைக்கு நன்றி.சிம்பு கொண்டு நடும்போது வேர்கள் வந்து வளர 15- 20 நாட்கள் ஆகும்.சில நேரம் சிம்புகள் வராமல் போவதும் உண்டு. இந்த முறையில் ஏற்கனவே வேர்கள் உள்ளதால் உடனே வளர ஆரம்பிக்கும்.100% வருவதற்கான வாய்ப்புள்ளது. வேர் எவ்வளவு தூரம் வளர்ந்துள்ளது என காண்பிக்க நீளமாக்கி படம் எடுத்துள்ளேன்.
    உண்மையில் வேர் நடு படத்திலுள்ளது போல் Pot ஐ சுற்றியிருக்கும். எளிதாக அட்டைப் பெட்டிகளில் அடுக்கி அனுப்பலாம்.

    ReplyDelete
  4. திரு.ஜயராமன்

    உங்கள் வருகைக்கு நன்றி.எந்த இடத்தில் வேண்டுமானாலும் (பனிபகுதி தவிர) வளர்க்கலாம்.சற்று பெரிய தொட்டியில் நன்கு வெயில் படும் பகுதியில் வளர்க்கலாம். சற்று கூடுதலாக தென்னைநார் கழிவை உபயோகியுங்கள். தற்சமயம் Growbag என்ற வளர்க்கும் பைகள் உள்ளன. எனது http://maravalam.blogspot.com/2007/11/grow-bag.html பதிவை பாருங்கள். எனது mail id:vincent2511@gmail.com

    ReplyDelete
  5. சார் வாழ்த்துக்கள் ..தொடரட்டும் உங்கள் முயற்ச்சி...

    ReplyDelete
  6. உங்கள் யோசனை முதல் பக்கத்தில் வந்ததற்கு வாழ்த்துக்கள் வின்செண்ட்..
    சீக்கிரமே வெட்டிவேரின் தாயகமும் இதன் அருமை உணர்ந்து செயல்படவேண்டும் என்ற உங்கள் ஆசையும் நிறைவேரட்டும்..

    ReplyDelete
  7. திரு.இளைய கவி

    உங்கள் வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

    ReplyDelete
  8. திருமதி.கயல்விழி முத்துலெட்சுமி

    உங்கள் வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

    ReplyDelete
  9. வின்ஸெண்ட் ஐயா,
    விவசாயம் பற்றிய பதிவுகளை இங்கே சேமித்து கடந்த 3 வருட காலமாக இங்கே சேமித்து வருகிறேன்
    இந்த இடுகையையும் சேமித்து வைத்திருக்கிறேன், நன்றி!

    ReplyDelete
  10. Good post! Thank you!

    ReplyDelete
  11. திரு.ILA(a)இளா

    உங்கள் வருகைக்கும் இந்த இடுகையை சேமித்து வைத்ததிற்கும் மிக்க நன்றி.அந்த பதிவில் என் பின்னூட்டம் இருக்கிறது.

    ReplyDelete
  12. திரு. அனானி

    உங்கள் வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  13. VincentThank you very much.Why you can try in your place at Meetuppalayam road Sanganur pallam on both side of the pallam near the bridge to attactract all near.
    Thank you,
    your luv kuppu.

    ReplyDelete
  14. Dear Sir

    Thank you very much for your visit and suggestions.

    ReplyDelete